பக்கம்:அறவோர் மு. வ.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146 அறவோர் மு. வ.

வந்து, பெண்ணாடம் புதுமைப் பிரசுரத்தின் மூலம் முதலில் வெளியிட்டார்.

சென்னை அரசாங்கப் பரிசினை இவர்தம் ’ஒவச் செய்தி’, ’அரசியல் அலைகள்’, ‘கள்ளோ காவியமோ” ஆகிய மூன்று நூல்களும் பெற்றன.

’திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’, `மொழி நூல்’, ‘விடுதலையா’ ஆகிய மூன்று நூல்களும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டினைப் பெற்றன. 1962ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமிப் பரிசான ரூபாய் ஐயாயிரத்தினை இவர் தம் ’அகல் விளக்கு’ பெற்றது.

இவர் தொடக்க நாளில் எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை’ இதுவரை பல லட்சம் படிகளுக்குமேல் விற்று எல்லாக் காலப் பதிவினை (All time record) ஏற்படுத்தியுள்ளது. ’தமிழ் இலக்கிய வரலாறு’, ’நல்வாழ்வு’ ஆகிய இரண்டும் அண்மைக் காலத்தில் வெளிவந்தன.



இவர்தம் நூல்களிற் காணும் சிறந்த கருத்துகள் சில: ’நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்கவேண்டும் அல்லவா? நன்மை வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு’ (தம்பிக்கு)

’அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கி நட, உரிமைக்காகப் போராடிக் காலங் கழிக்காதே’ (தங்கைக்கு)’

’இன்பத்திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்க வல்லவரைத் தேடு. உறவானாலும் நட்பானாலும் காதலானாலும் இப்படித்தான தேடவேண்டும்’ (அல்லி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/149&oldid=1239015" இலிருந்து மீள்விக்கப்பட்டது