பக்கம்:அறவோர் மு. வ.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அறவோர் மு. வ.

'எண்ணங்களாகிய விதைகளை ஊன்றிச் செல்வோம், நூல்களின் வாயிலாக; பயன் தரும்போது தரட்டும்’ என்று கூறிவந்தது எண்ணங்கள் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் அவர் கொண்டிருந்த உறுதியைப் புலப்படுத்துகின்றது. எனவேதான் அவர் தம் சிந்தனைகளை - கருத்துகளை - எண்ணங்களைப் பரப்புவதற்கு ஏற்ற களமாக இலக்கிய வடிவங்களைக் கொண்டுள்ளார்.

இலக்கிய வடிவங்களில்

கலை கலைக்காக அன்று. வாழ்க்கைக்காக. இலக்கியக் கலையும் வாழ்க்கைப் பயன்பாட்டிற்கு ஏற்றதாகவே அமையவேண்டும். இந்த இலக்கியக் கலையைப் பற்றிப் பேசும்போது டி. எச். லாரன்ஸ் அவர்கள்,

"கலையின் முடிந்த நோக்கம் அறம் உணர்த்தலே. இலக்கிய இன்பம் நல்குவது அன்று. அணிநலன் பயப்பது அன்று. பொழுதுபோக்கப் பயன்படுவது அன்று.

"அறம் உணர்த்தல் வேண்டும். போதிக்கும் முயற்சி கூடாது. தெளிவும் உணர்ச்சியும் அந்த அந்த அறநோக்கு கற்போரின் இதயப் பாங்கை மாற்றாமல். இரத்தப் போக்கையே மாற்றும் ஆற்றல் பெற்றிருத்தல் வேண்டும். முதலில் இரத்தத்தை மாற்ற வேண்டும்: பிறகு தொடர்ந்து இதயத்தை மாற்ற வேண்டும்"

என்று கூறுவர். டாக்டர் மு.வ. அவர்களும் தாம் கண்ட வாழ்க்கை உண்மைகளை - அறங்களை மற்றவர்க்கு உணர்த்த நாவல், சிறுகதை, நாடகம், கடிதங்கள் என்று பல்வேறு இலக்கிய வடிவங்களைக் கருவியாகக் கொண்டுள்ளார்.

“உண்மையிலேயே நெஞ்சார்ந்த ஈடுபாட்டுடன் தாம் கண்ட வாழ்க்கையையும் அதன் நோய்களையும், அவற்றிற்கான மருந்தினையும் கலந்து தருவதற்கே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/15&oldid=1236290" இலிருந்து மீள்விக்கப்பட்டது