பக்கம்:அறவோர் மு. வ.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

அறவோர் மு. வ.

1969 ஆம் ஆண்டு இவர்தம் திருவுருவப்படம் அந்நாள் தமிழ்மன்றத் தலைவரும், பின்னாளில் அவர்தம் டாக்டர் பட்ட ஆராய்ச்சி மாணவருமாகிய கவிஞர் மா. செல்வ ராசன், அவர்தம் நண்பர்கள் முயற்சியால் அப்பா அவர்கள் பணியாற்றிய பச்சையப்பர் கல்லூரியில் அந்நாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறியது வருமாறு:

"டாக்டர் மு. வ. அவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றவர்கள், மறுப்பவர்கள் என்று பிரித்துப் பார்க்க முடியாத வகையில் தமிழ்க் கருத்துக் கொண்ட அத்தனை பேரும் மிக இனிமையாகவும் எளிதாகவும் ஏற்றுக் கொள்ளத் தக்க முறையில் தம்முடைய கருத்துக்களைப் பக்குவப்படுத்தி, பதப்படுத்தி, பலருக்கும் நல்லவிதத்திலே புரியும்படிச் செய்து கருத்துக்களை அளித்துக் கொண்டு வருகின்ற ஒரு பெரும் எழுத்தாளர். டாக்டர் மு. வ. அவர்கள் தம்முடைய எழுத்தின் மூலம் பேச்சின் மூலம் தாமும் சிந்திப்பார். அவருடைய பேச்சையும் எழுத்தையும் பெற்றவர்கள் தாமும் சிந்திக்கத் தொடங்குகின்ற வகையில் அந்தப் பேச்சுக்கும் எழுத்துக்கும் தனிச் சிறப்பு இருக்கின்றது.”

எல்லோரும் இனிதே பாராட்டும் பண்பாளர் அப்பா அவர்கள். அவர்கள் பொன்னுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த, எல்லாக் கட்சியினைச் சேர்ந்த பெருந்தலைவர்களும், கல்வியாளர்களும், எழுத்தாளர்களும், மாணவ ஆசிரியருலகினரும் ஆட்சியாளரும் ஒருங்கு வந்திருந்ததே. அவர்களின் வாழ்வினை வகையுறக் காட்டும்.



எழுபது ஆண்டுகள் வாழ்வேன் என்று கூறிய அப்பா இன்று இல்லை. அவர்கள் அனைவர் நெஞ்சிலும் நினைவிலும் நிறைந்து இன்று வழிகாட்டுகிறார்கள்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/151&oldid=1239017" இலிருந்து மீள்விக்கப்பட்டது