பக்கம்:அறவோர் மு. வ.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

அறவோர் மு. வ.



கடித இலக்கியங்களாக டாக்டர் மு. வ. அவர்கள் படைத்த நூல்கள் மொத்தம் ஐந்தாகும். இத் துறையில் முதலாவதாக அவர் எழுதி வெளிவந்த நூல் 'அன்னைக்கு' என்பதாகும். இந்நூல் 1948 ஆம் ஆண்டு வெளிவந்தது: இந்நூலில் எட்டு மடல்கள் மலர்ந்துள்ளன. அடுத்து, 1949 ஆம் ஆண்டில் வெளிவந்த 'நண்பர்க்கு’ எனும் நூலில் ஒன்பது மடல்களும், 1949 ஆம் ஆண்டில் வெளிவந்த 'தம்பிக்கு' எனும் நூலில் எட்டு மடல்களும், 1950 ஆம் ஆண்டில் வெளிவந்த தங்கைக்கு: எனும் நூலில் எட்டு நூல்களும், அதே ஆண்டில் வெளிவந்த 'யான் கண்ட இலங்கை’ எனும் நூலில் ஐந்து மடல்களும் அமைந்துள்ளன.

டாக்டர் மு. வ. அவர்கள் தம் டாக்டர் பட்ட ஆய்வேட்டினை 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பித்தார்கள். அன்று சோர்வோடு வந்து வீட்டில் மாலையில் எந்த மின் விளக்குகளையும் போடாமல் ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்தம் வாழ்வில் விரும்பிப் பின் பற்றிய அண்ணல் காந்தியார் அவர்கள் டெல்லியில் ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் சுடப்பட்டு மறைவெய்தினார் என்பதனைக் கேட்டுத் திடுக்கிட்டார். இந்த நிகழ்ச்சி அவர் மனத்தில் ஆழப் பாய்ந்தது. அவர்தம் படிப்பறையில் (study Room), காந்தியார்_குண்டுபட்டு இறந்து பொது மக்கள் பார்வைக்கு அவர் திருவுடலம் வைக்கப்பட்டிருந்த நிலையில் செய்தித்தாளில் வெளிவந்த அப் படத்திற்குக் கண்ணாடிச் சட்டமிட்டு வைத்திருந்ததனைப் பார்த்த நான், திடுக்கீடு விளைவிக்கும் இப்படம் ஏன்?” என்று ஒருமுறை கேட்டேன். "அறம் வளர்த்த பொதுநலம் பேணிய நாட்டின் தந்தைக்கே இந்நிலை. எனவே, வாழ்வில் ஒவ்வொருவரும் அயராது தம் வாழ்நாளின் ஒவ்வொரு நாளிலும் கடமையுணர்வுடன் தாம் ஏற்ற பணிகளை இனிதேயாற்றி வரவேண்டும் என்பதனை அப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/153&oldid=1224229" இலிருந்து மீள்விக்கப்பட்டது