பக்கம்:அறவோர் மு. வ.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

அறவோர் மு. வ.



‘திட்ப நுட்பம் செறிந்தன சூத்திரம்’ என்பர்.23 கற்பின் இலக்கணம் காட்டும் இத் தொடரினை 'நூற்பா' வாகக் கொள்ளலாமன்றோ?

முன்னோர் கண்ட நன்னெறி

இல்வாழ்க்கை இனிதே நடைபெறுதற்கு முன்னோர் வகுத்துச் சென்றுள்ள வாழ்வியல் அமைப்பினைப் பின் வருமாறு வகையுறப் போற்றியுள்ளார் டாக்டர் மு. வ. அவர்கள்.

‘அந்தக் கால நிலையை ஒட்டி இல்வாழ்க்கை சீராய் நடைபெறுவதற்காக முன்னோர் சில திட்டங்கள் அமைத்திருந்தனர். ஆண் உடல்வலி மிகுந்தவன்; ஆகையால் அவன் வெளியுலகில் அலைந்து பொருள் தேடுக என்று அமைத்தனர். பெண் உடல்வலி குறைந்தவள்; ஆக்க வேலையில் ஆர்வம் நிறைந்தவள்; ஆதலால் வீட்டிலிருந்து அமைதியைக் காத்து வருக என்று அமைத்தனர். அலைவுக்கு ஏற்றது ஆண் உடல், அமைதிக்கு உரியது பெண் உடல் என்று அவர்கள் வகுத்த முறை இயற்கையோடு இயைந்த முறையாக இருந்தது. அதற்கு ஏற்றவாறே ஆண் வயதில் மூத்தவனாக இருக்குமாறும் பெண் இளையவளாக இருக்குமாறும் ஏற்படுத்தினர். இந்த ஏற்பாட்டில் தவறு காண முடியாது. இன்றைக்கும் உலகில் பெரும்பான்மை யோர் இதையே போற்றி வருகின்றனர். 24

மேலும் அவர் குறிப்பிடுவதாவது :

"முன்னோர்களின் அறிவுரை என்ன? உரிமைப் பேச்சுப் பேசுவதில் பயன் என்ன?" 25

பிரிவு வேண்டும்

"நம் நாட்டில் திருமணமான தொடக்கத்தில் மனைவி கணவனோடு இருக்கக் கூடாது என்று பிரிக்கும் வழக்கம் ஒன்று இருந்து வருகிறது. அதுவும் இவ்வகையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/159&oldid=1224242" இலிருந்து மீள்விக்கப்பட்டது