பக்கம்:அறவோர் மு. வ.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166 அறவோர் மு. வ.

மட்டுமே நல்ல ஒளி வீசுகின்றது. பழமைப்பட்டுத் தேயத் தேய, ஒளி இழந்து மங்குகின்றது. உண்மையான பொன்னால் செய்யப்பட்ட பொருள் ஒருநாளும் அப்படி ஆகாது அல்லவா? பழகப் பழக, தேயத்தேய, அது குன்றா ஒளி வீசும் அல்லவா? அதுபோல் வாழும் வாழ்க்கையே . நல்லவர்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.”58

”உன்னைப் போன்ற ஒருத்தி வயலிலும் கரம்பிலும் காட்டிலும் மேட்டிலும் பகலெல்லாம் உழைக்கிறாள்; பொழுதுபோனதும் வீட்டுக்குத் திரும்பிச் சமைத்துத் தொல்லைப்படுகிறாள். கணவனுக்கும் மக்களுக்கும் உணவு இட்ட பிறகு எஞ்சியதை அரைவயிறு உண்கிறாள். கட்டுவதற்குப் போதுமான கந்தை இல்லை. எண்ணெய் தேடித் தலைவார நேரமும் இல்லை; காசும் இல்லை. கண்ணாடி எடுத்து முகத்தைப் பார்க்க வாய்ப்பு இல்லை. (திருமணம் ஆவதற்கு முந்திய நாழிகையில் உடைந்த கண்ணாடி ஒன்றை எடுத்துப் பார்த்து மகிழ்ந்திருப்பாள்.) அவளுக்கு எதிர்காலத்தைப் பற்றி எண்ணுவதற்கு வழி இல்லை; நிகழ்காலத்தில் எதையும் தாங்கிக்கொள்ளும் நிலை இருக்கின்றது. சுத்தம் சுகாதாரம் இவை எல்லாம் அவள் அறியாத புதுச் சொற்கள். கலை, கருத்து இவை எல்லாம் அவளுக்குக் கனவைவிட அப்பாற் பட்டவை. அவள் உன்னைப் போன்ற தமிழ்ப் பெண்தான்; பெண்தான்.”59

நினைத்துப்பார். நம் வீட்டில் பாத்திரங்களைத் துலக்கி வேலை செய்கிறாளே, அவளும் உன்னைப் போன்ற பெண்தான் உனக்குமேல் ஐந்து ஆறு வயது பெரியவளாக இருப்பாள். மாதம் ஏழு ரூபாய்ச் சம்பளத்திற்குத் தன் வீட்டைவிட்டு அயலார் வீட்டிற்கு வந்து உழைக்கிறாள். வைகறையில் துயிலெழுகிறாள். (வேறு எந்த நாகரிகப் பெண்களால் முடியும்?) சொந்த வீட்டு வேலைகள் சில வற்றைச் செய்கிறாள். தன் குழந்தைகள் எழுவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/169&oldid=1462070" இலிருந்து மீள்விக்கப்பட்டது