பக்கம்:அறவோர் மு. வ.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

அறவோர் மு. வ.


"ஆஸ்திரேலியாவைப் பற்றியும் அமெரிக்காவைப் பற்றியும் இமயமலையைப் பற்றியும் மிசிசிபியைப் பற்றியும் எக்ஸ்ரேயைப் பற்றியும் அணுக்குண்டைப் பற்றியும் அறியும் அறிவால் இவ்வாழ்க்கையைச் செம்மையாக நடத்த முடியாது என்றும், மனத்தைப் பற்றி அறிந்து ஒழுகினால்தான் சீராக நடத்த முடியும் என்றும் விளக்கினேன். மற்றப் பொருத்தங்களைவிட மனப் பொருத்தமே முதன்மையானது என்றேன்.”

"வீடு தீப்பற்றி எரியும்போது எதை முதலில் எடுத்துக் காக்க வேண்டும் என்ற அறிவு எல்லோர்க்கும் இயற்கையாக உள்ளது. கந்தலையும் குப்பையையும் துடைப்பத்தையும் முறத்தையும் அப்போது யாரும் எடுத்துச் செல்வதில்லை. பெட்டியையும் பேழையையும் முதலில் எடுத்துக் காக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியும் வாய்ப்பு இருந்தால் துணிமணிகளையும் உணவுப் பொருள்களையும் எடுக்கிறார்கள். சிறந்தது இது. ஆகையால் இதை முன்னே எடுக்க வேண்டும் என்று தெளிவு இயற்கையாக இருக்கிறது. சிறப்பு இல்லாதது இது. ஆகையால் எரிந்து போனால் போகட்டும் என்ற துணிவு மனப்பான்மையும் இருக்கிறது.

"இது புறத்தே நேரும் நெருக்கடி. அகத்தே - உள்ளத்தில் - நெருக்கடி நேரும்போது இவ்வாறு நடந்து கொள்ள வல்லவர்கள் எப்போதும் எந்தத் துறையிலும் வெற்றிபெற முடியும். எதை எதை விடாமல் போற்றுவது என்றும், எதை எதைக் கைவிடத் துணிவது என்றும் தெளிவாக உணர்ந்து நடக்கவேண்டும்.

தேர்வுக்குப் படிக்கும் மாணவன்,தேர்வு நெருக்கத்தில் பாடநூல்கள் முதன்மையானவை என்று உணர்ந்து மற்றவற்றைக் கைவிடத் துணியாவிட்டால் பயன் என்ன? கலையில் ஈடுபட்ட கலைஞன் தன் கலைத்துறைக்கு உரியவற்றைப் போற்றுவதோடு, நெருக்கடியில் மற்றவற்றை மறக்காவிட்டால் பயன் என்ன? நாட்டுத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/171&oldid=1224306" இலிருந்து மீள்விக்கப்பட்டது