பக்கம்:அறவோர் மு. வ.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

169

தொண்டில் ஈடுபட்ட ஒருவன் நெருக்கடி நேரும்போது தன் மனைவி மக்களையும் எதிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் தள்ளிவைக்கத் துணியாவிட்டால் பயன் என்ன?"

படிக்க வேண்டிய நூல்கள்

பெண்கள் படிக்க வேண்டிய நூல்கள் என்று ஆசிரியர் குறிப்பிடும் நூல்கள் பின்வரும் அவர் கூற்றால் விளங்கும்:

“இளங்கோ எழுதிய கண்ணகியின் காவியத்தைப் படி: பல முறை படி; என்றும் படி. குயூரி அம்மையாரின் வரலாற்றையும் கஸ்தூரிபா காந்தியின் வரலாற்றையும் திரும்பத் திரும்பப் படி. இவை போன்றவற்றை மேன்மேலும் படித்துக் கொண்டிரு.

நடபுப் பற்றி நவில்வன

நட்பை எவ்வாறு நாடிப் பெற வேண்டும் என்பதனைப் பின்வரும் பகுதியில் டாக்டர் மு. வ. அவர்கள் விளக்குகின்றார்கள்.

"ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கிலப் புலவர் கண்டவரோடு எல்லாம் பழகிப் புதிய புதிய நட்புகளைப் பெருக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்."

நாசூக்கான திட்டல்

தாம் கூறவந்த கருத்தினை நாசூக்காக வெளிப்படுத்துதலில் டாக்டர் மு. வ. திறன் வாய்ந்தவர் என்பதனைப் பின்வரும் பகுதிகளில் காணலாம்:

"மானம் இழந்து வாழ்கின்ற பெண்களைப் பற்றி நான் குறிப்பிட வேண்டியதே இல்லை. பாத்திரம் துலக்கினாலும், முறுக்கு, வேர்க்கடலை விற்றாலும், பிச்சை எடுத்தாலும் வேறு என்ன செய்தாலும் சரி, மானத்தையும் விட்டு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/172&oldid=1224308" இலிருந்து மீள்விக்கப்பட்டது