பக்கம்:அறவோர் மு. வ.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

அறவோர் மு. வ.

ஒழுக்கமும் கெட்டு வாழத் தொடங்குகின்ற பெண்கள், முன் குறித்தவர்களைவிட ஒரு சிறிது நன்றாகவே வாழ்கிறார்கள்! எல்லாம் நம் சமுதாயப் பெருமை!

"திருவள்ளுவரின் அறத்தைப் பற்றியும் கண்ணகியின் தியாகத்தைப் பற்றியும் காந்தியடிகளின் வாய்மையைப் பற்றியும் கஸ்துரரிபாவின் உறுதியைப் பற்றியும் எளிய வாழ்வின் செம்மையைப் பற்றியும் இல்லறத்தின் அமைதியைப் பற்றியும் ஏழைகளின் முன்னேற்றத்தைப் பற்றியும் உலக ஒருமைப்பாட்டைப் பற்றியும் பேசும்போக்கு எங்கே உள்ளது? இவைகளை எல்லாம் சில ஆண்டுவிழா மேடைகளுக்கு என்றே ஒதுக்கிவிட்டார்கள் போல் தெரிகிறது.

மனைவி போற்ற வேண்டிய நெறிகள்

இல்வாழ்க்கையில் நிறைந்த பயனான வெற்றி காண்பதற்கு மனைவி ஒருத்தி கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளாக டாக்டர். மு. வ. அவர்கள் வற்புறுத்தும் கருத்துகள் பின்வருமாறு:

"கணவனோடு வாழும் ஒருத்திக்குக் கணவனுடைய அன்பே முதன்மையானது; மக்கள் இரண்டாம் நிலையினர்; கணவன் பெற்றோரும் தன் பெற்றோரும் மூன்றாம் நிலையினர்; நண்பரும் உறவினரும் நான்காம் நிலையினர்; புகழும் மதிப்பும் ஐந்தாம் நிலையின; கலையும் பொழுது போக்கும் ஆறாம் நிலையின; தெருவாரும் ஊராரும் ஏழாம் நிலையினர்; இப்படியே மற்றவற்றையும் மற்றவர்களையும் முறைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

"அன்புக்காக விட்டுக்கொடுத்து இணங்கி நட, உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்காதே என்று நான் சொல்வேனானால், அது உனக்கும் உன்னைப் போன்ற பெண்களுக்கும் மட்டும் சொல்லும் அறிவுரை என்று எண்ணாதே. என்னுடன் பழகும் நண்பர்களான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/173&oldid=1224309" இலிருந்து மீள்விக்கப்பட்டது