பக்கம்:அறவோர் மு. வ.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

171

ஆண்கள் பலர்க்கு இதையே நான் சொல்லியிருக்கிறேன். 'ஒருவர் பொறை இருவர் நட்பு' என்னும் நாலடியாரின் பொன்மொழி இல்வாழ்க்கையின் மந்திரமாக விளங்க வேண்டும்; ஒருவேளை கணவனும் இன்னொரு வேளை மனைவியுமாக விட்டுக்கொடுத்தால்தான் வாழ்க்கை எளிதாக நடக்கும்.’

"ஆகையால், உலகப் படைப்பை மட்டும் அறிதலும், உலக வரலாற்றை மட்டும் படித்தலும், காவியங்களை மட்டும் கற்றலும், கடவுளை மட்டும் பூசித்தலும் இருந்து விட்டால் பரந்த நோக்கம் வந்துவிடாது. ஏழைகளின் முன்னேற்றத்தை எண்ண வேண்டும்; சுற்றுப்புறம் சீர்பெற வழிகோல வேண்டும்; ஆடம்பர மோகத்தை அகற்றவேண்டும்; தம் குறையைத் தாமே உணர வேண்டும்; மேற் சொன்னவற்றோடு இந்த நான்கும் பொருந்தினால்தான் குறுகிய நோக்கம் ஒழிந்து உயர்ந்த வாழ்வு அமையும். விவேகாநந்தரின் வாழ்வையும் ஆராய்ந்து பார்."

அவல ஓவியங்கள்

கிராமத்தில் பெண்ணையும், வேலைக்காரியையும், ! முறுக்கு விற்கும் கிழவியையும் படம் பிடித்துக்காட்டி, நம் நெஞ்சில் இரக்கம் தோன்ற வைக்கிறார்.

நடைச்சிறப்பு

டாக்டர் மு. வ. அவர்கள் கையாளும் நடை எளிமையானது; இனிமையானது; சிக்கலற்றது; துரய்மையும் தெளிவுங் கொண்டது; திட்பமும் நுட்பமும் செறிந்திலங்குவது. இதனை இக் கட்டுரையில் மேற்கோளாகக் கையாண்டிருக்கும் பகுதிகள் கொண்டே அறியலாம்.

'நினைத்ததை எழுதாமல் நினைத்து எழுதியவர்' என்று முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/174&oldid=1224310" இலிருந்து மீள்விக்கப்பட்டது