பக்கம்:அறவோர் மு. வ.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

அறவோர் மு. வ.

அவர்கள் தம் இரங்கல் உரையில் குறிப்பிட்டது இங்குக் கருதத்தக்கது.

"உங்கள் அன்பான இல்வாழ்க்கை வளர்பிறைபோல் வளரவேண்டும் என்று விரும்புகின்றேன். அது என் வாழ்த்துதலில் இல்லை; நீங்கள் வாழும் முறையில் இருக்கிறது."

"பசி எடுக்கின்ற வயிறு உள்ளவர்கள்தான் வயிறாரச் சாப்பிட முடியும். அடங்கி நடக்கின்றவர்கள்தான் உரிமையின் நன்மையை அனுபவிக்க முடியும்."

"அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கி நட, உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்காதே."

"ஆடம்பரம், ஆணவம், ஆரவாரம் இவைதான் இந்தக் காலத்து நாகரிகத்தின் உயிர்நாடிகள். தனி வாழ்க்கையில் மனம் பண்படுவதற்கு இவைகள் தடைகள் என்பது என் கருத்து."

"அம்மா! நீ கணவனுடைய மனம் அறிந்து நடந்து கொள்வதில் வல்லவளாக இருக்க வேண்டும். மனம்தான் வாழ்க்கை. மனம் அறிந்து மகிழ்விக்கத் தெரியாத பெண்கள், அழகு பண்பு திறமை எல்லாம் இருந்தும் வாழ்க்கையில் ஏமாந்து துன்புறுகிறார்கள். அழகும் பண்பும் திறமையும் குறைவாக இருந்தாலும், மனம் அறிந்து நடக்கத் தெரிந்த பெண்கள் வெற்றி பெறுகிறார்கள்.

டாக்டர் மு. வ. அவர்கள், 'கருத்துகளே ஆற்றல்மிக்க படைக்கலன்கள்’ என்று எண்ணியதனை இந்தப் பகுதிகள் உணர்த்தும்.

சுருங்கச் சொன்னால் டாக்டர் மு. வ. அவர்களின் 'தங்கைக்கு' திருவள்ளுவர் காட்டும் இல்வாழ்க்கைச் சிறப்பினை உணர்த்தவந்த ஒப்பற்ற உயரிய நூல் எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/175&oldid=1224312" இலிருந்து மீள்விக்கப்பட்டது