பக்கம்:அறவோர் மு. வ.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

V

மு. வ. நாவல்களில்

சமுதாய நோக்கு


இருபதாம் நூற்றாண்டு இலக்கியம் பல துறைகளில் வளர்ந்து செழித்தது. பாரதியின் கவிதையில் தொடங்கிய மறுமலர்ச்சி, பல துறைகளிலும் பயன் நல்கியது. ஆங்கிலேயர் தொடர்பால் வேகமாக வளர்ந்த தமிழ் உரைநடை, தமிழில் சிறுகதை, நாவல், நாடகம் முதலான இலக்கிய வகைகள் தோற்றமும் தொடக்கமும் வளர்ச்சியும் வாழ்வும் பெற வகை செய்தது. முற்காலக் காப்பியங்களின் இடத்தினை நாவல் கைப்பற்றிக் கொண்டது. காரணம், நாவல்கள் நாம் வாழும் சமுதாயத்தைப் பிரதிபலிப்பனவாக அமைந்து விளங்கத் தொடங்கின. எனவே நாவலைப் படிக்கும்போது நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தையே பார்க்கிறோம் என்னும் உள்ளுணர்வு தோன்றத் தலைப்பட்டது. அவ்வுள்ளுணர்வு நாவல்களில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொள்ள வைத்தது. சுருங்கச் சொன்னால் இன்று எழுதப்படும் சமூக நாவல்கள் நாம் வாழும் சமுதாயத்தின் பிரதிபலிப்பு எனலாம்.

டாக்டர் மு. வரதராசனார் தமிழ் பயின்ற சான்றோர்; அறிஞர் பெருமக்கள் பலரோடு பழகியது போன்றே சமுதாயத்தின் பல்வேறு வாழ்க்கை நிலைகளைக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/179&oldid=1239023" இலிருந்து மீள்விக்கப்பட்டது