பக்கம்:அறவோர் மு. வ.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

179

"உள்ளம் எவ்வளவு உயர உயரப் பரந்தாலும் காற்றாடி நூலால் பிணிக்கப்பட்டிருப்பது போல் அது உடம்பின் தொடர்பால் சின்ன உணர்ச்சிகளுக்குச் சிறிது கட்டுப்பட்டே இருக்கிறது."

"உடம்பில் அழுக்கு ஏற்படுகிறது; பிறகு குளிக்கிறோம். உள்ளமும் அப்படித்தான். தூய எண்ணங்களில் அடிக்கடி குளித்துக் கொண்டிருக்க வேண்டும்".

இவ்வாறு உள்ளம் திருந்தி உயர்ந்து தனி மனிதன் சிறந்தால் பின்னர்ச் சமுதாயமும் திருத்தமுறும் என்பது மு. வ. கூறும் கருத்து.

"தனிமனிதன் இன்புற வேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்க வேண்டும், சமுதாயம் பழங் காலத்துத் தேர் போன்றது. அதை எல்லோரும் இழுக்க வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் இன்பம் உண்டு. பலர் ஏறி உட்கார்ந்து கொண்டு இன்பம் உற, சிலர் இழுத்துச் செல்கின்ற தேர் அன்று இது. ஒவ்வொருவரும் தம் கடமையைக் குறைவில்லாமல் செய்ய, ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைப் பெறுமாறு அமைந்திருப்பதே நல்ல சமுதாயம் ஆகும்."

இவ்வாறு நல்ல சமுதாயம் அமையவில்லையானால் விளையப்போவது என்ன என்பது குறித்தும், அந்தத் தீமைகளைப் போக்கி ஒழுங்கான சமுதாயத்தினை அமைப்பதற்குமேற்கொள்ளப்பட வேண்டிய கடமை குறித்தும் அவர் ஆழமாகச் சிந்தித்துத் தம் கருத்தைப் பின்வருமாறு அமைக்கிறார்:

"எப்படியும் நல்ல சமுதாயம் அமையவில்லையானால் அமைதியான வாழ்க்கை இல்லாமற் போகும். நூற்றுக்கு ஒருவர் இருவரை மட்டும் திருத்தி இனிப் பயன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/182&oldid=1239571" இலிருந்து மீள்விக்கப்பட்டது