பக்கம்:அறவோர் மு. வ.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

அறவோர் மு. வ.


விளையாது. பெரும்பாலோர் நெறியோடு வாழ்வதற்கு உரிய வழிவகைகளை அமைக்கவேண்டும். இரண்டில் ஒன்று நடக்கவேண்டும். இன்றைய பெரிய ஊர்களும் பெரிய அமைப்புகளும் குறைந்து பழங்காலம்போல் மனச்சான்று விளங்கும் சிறிய ஊர்களும் சிறிய அமைப்புகளும் ஏற்படவேண்டும். அதுதான் காந்தியடிகளின் நெறி. மற்றொரு வழி, பழங்காலத்தில் நம்பிக்கையும் உறுதியும் ஊட்டியதாகிய சமயத்திற்கு ஒப்பாக இக்காலத்தில் வேறொன்று ஏற்படவேண்டும். எல்லோருடைய நன்மைக்காகவும் எல்லோரும் சேர்ந்து செய்யும் சட்டத்தைக் கடவுளின் ஆணைபோல் போற்ற வேண்டும்."

சமுதாயத்தில் நாம் காணுகின்ற கெட்டவர்களையும் போக்கிரிகளையும் அடியோடு ஒழித்துவிட முடியும் என்றோ, அல்லது அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்றோ கூறாமல், அவர்கள் மேல் நாம் இரக்கங் கொள்ள வேண்டுமென்றும் அவர்களைத் திருத்துவதற்கு விடாது தொடர்ந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு. மென்றும் அவர் 'மண் குடிசை' என்ற நாவலிலும் 'மண்ணின் மதிப்பு' என்ற கட்டுரை நூலிலும் குறிப்பிட்டிருக்கக் காணலாம்:

"ஒரு நாட்டில் சர்வாதிகாரி திடீரென்று தோன்றுவதில்லை. பலர்க்கு அவனைப் போன்ற மனம் வந்த பிறகுதான் அவன் தோன்றுகிறான். பலருடைய மனம் ஏமாற்றத்தாலும் நம்பிக்கையின்மையாலும் கெட்ட பிறகுதான், துணிச்சல் மிகுந்த ஒருவன் அப்படி ஆகிறான். சமுதாயத்தில் போட்டியாலும் ஏக்கத்தாலும் பலருடைய மனம் கெட்ட பிறகுதான் ஒரு சிலர் கொடியவர்களாக வளர்கிறார்கள். அவர்கள் கோபுரம் போன்றவர்கள். கோபுரத்தை மட்டும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/183&oldid=1239574" இலிருந்து மீள்விக்கப்பட்டது