பக்கம்:அறவோர் மு. வ.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

181


இடிப்பதால் பயன் இல்லை. உண்மையாக உணர்ந்தால், அவர்கள் மேல் இரக்கம் கொள்ளவேண்டும்.

-மண் குடிசை: ப. 443
"ஒரு சில நாட்களில் சமுதாயத்தைத் திருத்தி அமைத்துவிட வேண்டும் என்ற வேகம் உடையவர்களுக்கே உள்ளத்தில் சோர்வு ஏற்படுகிறது. நீதியின் பெருமை, நேர்மையின் மதிப்பு, மனச்சான்றின் வலிமை ஆகிய மூன்றும் சமுதாயத்தில் விளங்குமாறு நம்மால் இயன்ற தொண்டு செய்யவேண்டும் என்ற அமைதியான ஆசை கொண்டிருந்தால் அந்தச் சோர்வு ஏற்படாது. சமுதாயம் என்பது தனிமனிதர்களால் ஆனது. அவர்களில் எத்தனை பேருடைய மனப் பான்மையை நம்மால் திருத்த முடியுமோ அவ்வளவும் செய்வோம். இதுவே அடிப்படைத் தொண்டு என்று நம்புவோம்."
-மண்ணின் மதிப்பு: ப. 41-42

சமுதாய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் தகாதவர்களைத் தண்டித்து விடுவதால் மட்டும் பயன் விளைந்து விடாது, மாறாகக் குறை எங்கே உள்ளது என்று கண்டு, அதற்கு மாற்றுத் தேட முற்படவேண்டும் என்று அவர்தம் 'அல்லி’ என்னும் தொடக்க கால நாவலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

"இதுவரையில் தவறு செய்தவர்களைப் பிடித்துப் பிடித்து விடாமல் தண்டித்து வந்து என்ன பயன் கண்டோம்? குற்றங்கள் வளர்ந்து வருகின்றனவே தவிர, குறையவில்லை. உடம்பில் உட்கார்ந்து கடித்த கொசுக்களாகப் பார்த்து அவைகளை வேட்டையாடி நசுக்கிப் பொசுக்கி விடுவதில் வல்லவர்களாக இருக்கிறோம். அதற்காகவே நீதிமன்றங்கள், சிறைக் கூடங்கள் எல்லாம் ஏற்படுத்தி, ஏராளமாகச்

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/184&oldid=1239576" இலிருந்து மீள்விக்கப்பட்டது