பக்கம்:அறவோர் மு. வ.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

அறவோர் மு. வ.


செலவழித்து வருகிறோம். ஆனால் கொசுக்கள் வளர்வதற்கு இடம் தருகின்ற சாக்கடைகளையும் தேக்கங்களையும் ஒழித்துச் சீர்ப்படுத்துவதற்கு அதில் கால்பங்கு முயற்சியும் செய்வதில்லை".
-அல்லி, ப. 145.146

மேலும் மு. வ. அவர்கள் சமுதாயத்தை வெறும் அறவுரைகளால் மட்டும் திருத்திவிட முடியாது, என்று உறுதியாக நம்புகின்றார். விவேகானந்தரும், காந்தியடிகளும் பட்டினியால் வாடும் ஏழையிடம் முறையே கடவுளைப் பற்றியும், சுதந்தரத்தைப் பற்றியும் பேசமாட்டோம். அவர்களுக்குக் கடவுள் கஞ்சியின் வடிவில், ரொட்டியின் வடிவில் தான் காட்சியளிப்பார் என்று கருதியது போல டாக்டர் மு. வ. அவர்களும் சமுதாயம் புரையோடிப் போயிருப்பதற்குக் காரணம் வறுமையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும்தாம் என்று வற்புறுத்திக் கூறுகின்றார்,

"களவு ஒழிய வேண்டுமானால் நாட்டில் வறுமை இல்லாதவாறு செய்யவேண்டும். ஒருபுறம் முப்பது ரூபாய்ச் சம்பளமும் மற்றொரு புறம் முப்பதாயிரம் ரூபாய் வருவாயும் உள்ள மிக இழிவான நிலையைப் போக்கவேண்டும். ஆயிரம் மடங்கு உள்ள வேறுபாட்டை அகற்றி, இரண்டு மூன்று பங்கு வேறுபாடு தான் என்ற நிலைக்குக் கொண்டு வரவேண்டும்... இந்த மண்ணில் பிறந்த எல்லோருக்கும் வாழ்வு உண்டு, வளம் உண்டு என்ற நல்ல நிலைமை ஏற்படுத்த வேண்டும். இந்த மண்ணின் மதிப்பு உயர்வதற்கு அதுதான் தக்க வழி"

-மண்ணின் மதிப்பு: ப. 10-11

என்கிறார். மேலும் அவர்,

"இன்று அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமை தனிமனிதரைத் திருத்துவது அல்ல. சமுதாயத்தைத்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/185&oldid=1239579" இலிருந்து மீள்விக்கப்பட்டது