பக்கம்:அறவோர் மு. வ.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

அறவோர் மு.வ.


முதலில் ஏழைகளாக்கி, பிறகு பொல்லாத போக்கிரிகளாக்கி விடுகிறோம்."

இன்றுள்ள சமுதாயத்தை மண்குடிசையோடு ஒப்பிட்டுப் பின்வருமாறு பேசுகின்றார் மு.வ.

"இன்று உள்ள சமுதாயம் மண்குடிசை போன்றது. அதில் எலிகள் வளை தோண்ட முடிகிறது. பெருச்சாளிகள் கடைக்காலையே தோண்டுகின்றன. பலவகைப் பூச்சிகளும் குடிபுகுகின்றன. எல்லாம் சேர்ந்து குடிசையைப் பாழாக்க முடிகிறது. மண்குடிசையாக உள்ள வரையில் இவைகளைத் தடுக்க முடியாது. ஒன்று, குடிசையை விட்டு, இயற்கையோடு இயற்கையாய்க் குகையில் தங்கி வெட்டவெளியில் திரிய வேண்டும். அல்லது, ஒழுங்கான கல் வீடு கட்டி வாழ வேண்டும்; அப்போது எலிகள் முதலியன தோன்றி வளர முடியாது."

சமுதாயத்தில் தீமைகள் பல்கிப் பெருகி வளர்ந்து கொண்டே செல்கின்றன என்றும், இதற்கு இக்காலத்தில் தேர்தல் முறை ஒரு தீங்கான காரணமாய் அமைகிறது என்றும் குறிப்பிட்டுப் பின்வருமாறு மு.வ. கூறுகின்றார்:

“சமுதாயம் பெருகப் பெருக, நன்மை தீமைகளைக் கலந்து பங்கிட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது. பொதுத்தொண்டிலும் இந்தக் கலப்புத்தான் நிற்கிறது. ஆகையால் பணத்தை வாங்கிக் கொண்டு தேர்தலில் ஓட்டுப்போடும் மக்களைக் குறை சொல்வதா? தேர்தலில் வென்ற பிறகு செலவான பணத்திற்கு மேல் ஊழல் வழிகளில் சேர்த்துக்கொள்ள முயலும் உறுப்பினர்களைக் குறை கூறுவதா? அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தாவது தம் வேலைகளை முடித்துக் கொள்ள விரும்பும் மக்களைக் குறை கூறுவதா? எல்லாருடைய குறைகளும் ஒன்று கூடி உருவாகிப் பயன்-
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/187&oldid=1239584" இலிருந்து மீள்விக்கப்பட்டது