பக்கம்:அறவோர் மு. வ.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

அறவோர் மு. வ.

நாட்களுக்கென்று இரவலாகப் பெற்று, அதனை முழுவதுமாகப் படிசெய்துகொண்டு ஓசைப்படாமல் நூலைத் திரும்பத் தந்துவிட்டார். 'இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்பார்கள். அம்முறையில் இவர்க்கு யாப்பிலக்கணப் பயிற்சி இளமையிலேயே வாய்த்துவிட்டது. பிற்காலத்தில் பன்முறை இந் நூலினை இவர் சிறப்புத் தமிழ் பயிலும் மாணவர்க்கு வகுப்பறையில் கற்பிக்கும் நிலையும் நேர்ந்தது.

மெலியாத உள்ளம்

உயர்நிலைப் பள்ளியோடு இவர் படிப்பு முடிவுற்றது. தாலுக்கா அலுவலகத்தில் சேர்ந்தார். கடமையினைக் கண்ணுங் கருத்துமாகக் கவனித்து வந்தார். உயர் அலுவலர்கள் இவர்தம் வேலைத் திறனைக் கண்டு மகிழ்ந்தனர்; பாராட்டினர். ஆனால், அதே சமயத்தில் அளவிற்கு மீறிய வேலைச் சுமையால் இவர் உடல் நலிவுற்றது. எனவே, ஊர் திரும்பினார்; உடல் நலம் காத்தார். தமிழ் கற்றார்; புலவர் தேர்வு எழுதினார்; மாநில முதன்மை பெற்றார். ஆயிரம் ரூபாய்ப் பரிசும் வந்தெய்தியது. பி. ஓ. எல். தேர்விற்குத் தொடர்ந்து படித்தார். நன்முறையில் தேறினார். சென்னை, பச்சையப்பர் கல்லூரியில் தமிழ்ப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார்.

தாயினும் பரிவு

பச்சையப்பர் கல்லூரியே இவர் புலமையை வளர்த்தது; புகழைச் சேர்த்தது. இவர்தம் இனிய சொத்தாக மாணவச் செல்வங்கள் வாய்த்தனர். இவர் தம் வீடு விருந்தோம்பும் உணவுச் சாலையாக மாறிற்று. அருமை அம்மா அவர்கள் இன்முகத்தோடு பசியறிந்து, பெற்ற தாயினும் பரிந்து உணவு நல்கி, மாணவர் பலரைப் பெற்ற மைந்தரினும் பேணி வளர்த்தனர். வயிற்றுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/193&oldid=1224405" இலிருந்து மீள்விக்கப்பட்டது