பக்கம்:அறவோர் மு. வ.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

அறவோர் மு. வ.

மு. வ. வின் சமயநெறி

'எல்லாரும் வாழ வேண்டும்' எனும் உயரிய மனம் இவருடையது.

திருநாவுக்கரசரிடமும், தாயுமானவரிடமும், இராம தீர்த்தரிடமும் தேர்ந்த மனம் ஆன்மீக நெறியில் திளைத்தது.

நீரில் உப்பு கரைவதுபோல, கற்பூரம் எரிந்து காற்றில் கலப்பதுபோல, உலக உயிர்கள் இறைவனோடு கலந்து விடவேண்டும் என்பது இவர் கோட்பாடு.

நெஞ்சகத்தையே கோயிலாகக் கொண்டு, இறைவன் அருளைச் சுகந்தமாகக்கொண்டு, அன்பையே மஞ்சன நீராக அபிடேகித்து, பராபரனைப் பூசை கொள்ள அழைத்த தாயுமானவர் வழி இவர் ஆன்மீக நெறி.

உலகம் சுற்றி வந்தாலும் செருக்கு தலையைச் சுற்றாத அடக்கம் இவர் இயல்பு.

சுருங்கச் சொன்னால்-

தமிழர் பண்பாட்டின் உயர்தனிக் காவலர் இவர்.

இவர் மறைந்துவிட்டாரா?

இல்லை! நம் நெஞ்சங்களில் வாழ்கிறார்.

டாக்டர் மு. வ. வின் திருப் பெயர் வாழ்க! அவருக்கு தம் வணக்கங்கள்.

-தமிழ் உறவு, அக்டோபர், 1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/197&oldid=1224420" இலிருந்து மீள்விக்கப்பட்டது