பக்கம்:அறவோர் மு. வ.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

அறவோர் மு. வ.

★ கொஞ்சம் போராடவேண்டும். பிறகு விட்டுக் கொடுக்கவேண்டும். அப்படி நடந்தால்தான் ஆண்களைத் திருத்தமுடியும். அளவுக்கு மேல் போராடவும் கூடாது; அளவுக்கு மேல் விட்டுக் கொடுக்கவும் கூடாது. எதிலும் அளவு தெரிந்து கொண்டு நடந்தால், வாழ்க்கை துன்பம் இல்லாமல் போய்விடும்.

★ ஒரு நாள் இரண்டு நாள் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து குலாவுகிற உறவுக்கு - விபசார நட்புக்கு-அழகு கட்டாயம் வேண்டும். ஆனால் வாழ்நாள் முழுதும் பழகும் வாழ்க்கைத்துணைக்கு அன்புதான் முதலில் வேண்டியது. அழகு இருந்தால் இருக்கட்டும். ஓவியக் கலைஞனுக்கு நுட்பமான செவியும் இருந்தால் இருந்து போகட்டும்; ஆனால் அதையே நாடித் தேர்ந்தெடுக்கக் கூடாது.

★ உள்ளதைக் கொண்டு மகிழவேண்டும். வியாபாரம் செல்வம் இவற்றில் மட்டும் அல்ல; மனைவியோடு வாழும் வாழ்க்கையிலும் இதுவேண்டும். மனைவியிடம் அளவுக்கு மேல் அன்பு பணிவு அடக்கம் ஒடுக்கம் அழகு ஆர்வம் எல்லாவற்றையும் எதிர்பார்த்தால் கடைசியில் ஏமாந்து வருந்த வேண்டி ஏற்படும்.

★ உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம். மனம் கவலையற்றிருப்பது இரண்டாம் இன்பம். உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்.

★ திருமணம் செய்யும்போது ஆணின் உடல் வளத்தையும் பெண்ணின் உடல் வளத்தையும் பார்க்க வேண்டியது கட்டாயம். மூளை உழைப்பு உழைத்து உடல் மெலிந்துள்ள குடும்பத்தில் ஆண் பிறந்து வளர்ந்தவன் என்றால் பெண்ணும் அப்படிப்பட்ட மூளை உழைப்பும் உடல் மெலிவும் உள்ள குடும்பத்திலேயே பார்ப்பது நல்லது. அதை விட்டு விட்டுக் கை கால்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/201&oldid=1224434" இலிருந்து மீள்விக்கப்பட்டது