பக்கம்:அறவோர் மு. வ.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

அறவோர் மு. வ.

வாழ்வும் வேண்டும் என்று உணர்த்தும் நூல் திருக்குறள்.

  • குழந்தைகளுக்கு அறநூல்களைத் திணிப்பதைவிட, அறிவுரைகளைக் கூறுவதைவிட அவர்கள் பின்பற்றத் தக்க வழியில் நாம் வாழ்வதுதான் நல்லது. அறவுரைகளும் அறிவுரைகளும் வற்புறுத்தி ஊட்டும் உணவு போன்றவை. அவை நன்றாகச் செரிப்பதில்லை. பெரியோரின் நடக்கை அப்படி அல்ல; குழந்தை தாமே விரும்பி உண்ணும் பழம் போன்றது அது.
  • நன்மை தீமை இன்பம் துன்பம் குணம் குற்றம் நிறை குறை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, எதற்கும் தயங்கி நிற்காமல் ஒடுகின்ற கடிகாரம்போல் கடமைகளை அஞ்சாமல் செய்கின்றவர்கள்தான் இந்தக் காலத்தில் தலைமைப் பதவிக்குத் தக்கவர்கள். குடும்பத் தலைவியும் இப்படி இருந்தால்தான் வாழ்வு நன்றாக இருக்கும்.
  • எந்த விதிக்கும் விலக்கு உண்டு. விதிவிலக்கைப் பார்த்துவிட்டு நாம் எப்போதும் பின்பற்றக்கூடாது. அதுதான் நம் நாட்டில் எல்லோரும் செய்யும் தீங்கு. விதிவிலக்குக்கும் காரணம் உண்டு. அந்தக் காரணத்தை நாம் ஆராய்ந்து பார்க்கிறோமா?
  • இதுவரையில் தவறு செய்தவர்களைப் பிடித்து விடாமல் தண்டித்து வந்து என்ன பயன் கண்டோம்? குற்றங்கள் வளர்ந்து வருகின்றனவே தவிர, குறைய வில்லை. உடம்பில் உட்கார்ந்து கடித்த கொசுக்களாகப் பார்த்து அவைகளை வேட்டையாடி நசுக்கிப் பொசுக்கி விடுவதில் வல்லவர்களாக இருக்கிறோம். அதற்காகவே நீதிமன்றங்கள். சிறைக் கூடங்கள் எல்லாம் ஏற்படுத்தி ஏராளமாகச் செலவழித்து வருகிறோம். ஆனால் கொசுக்கள் வளர்வதற்கு இடம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/209&oldid=1224463" இலிருந்து மீள்விக்கப்பட்டது