பக்கம்:அறவோர் மு. வ.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

207

தருகின்ற சாய்க்கடைகளையும் தேக்கங்களையும். ஒழித்துச் சீர்ப்படுத்துவதற்கு அதில் கால் பங்கு முயற்சியும் செய்வதில்லை.

  • தனிமனிதன் இன்புற வேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்க வேண்டும். சமுதாயம் பழங்காலத்துப் பெரிய தேர் போன்றது. அதை எல்லோரும். இழுக்கவேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் இன்பம் உண்டு. பலர் ஏறி உட்கார்ந்துகொண்டு இன்பம் உற, சிலர் இழுத்துச் செல்கின்ற தேர் அன்று இது. ஒவ்வொருவரும் தம் கடமையைக் குறைவில்லாமல் செய்ய, ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைப் பெறுமாறு அமைந்திருப்பதே நல்ல சமுதாயம் ஆகும்.
  • எப்படியும் நல்ல சமுதாயம் அமையவில்லையானால், அமைதியான வாழ்க்கை இல்லாமற் போகும். நூற்றுக்கு ஒருவர் இருவரை மட்டும் திருத்தி இனிப் பயன் விளையாது. பெரும்பாலோர் நெறியோடு வாழ்வதற்கு உரிய வழிவகைகளை அமைக்க வேண்டும். இரண்டில் ஒன்று நடக்க வேண்டும். ஒன்று, இன்றைய பெரிய ஊர்களும் பெரிய அமைப்புகளும் குறைந்து பழங்காலம் போல் மனச்சான்று விளங்கும் சிறிய ஊர்களும் சிறிய அமைப்புகளும் ஏற்படவேண்டும். அது. தான் காந்தியடிகளின் நெறி. மற்றொரு வழி, பழங்காலத்தில் நம்பிக்கையும் உறுதியும் ஊட்டியதாகிய சமயத்திற்கு ஒப்பாக இக்காலத்தில் வேறொன்று ஏற்படவேண்டும்; எல்லோருடைய நன்மைக்காகவும் எல்லோரும் சேர்ந்து செய்யும் சட்டத்தைக் கடவுளின் ஆணை போல் போற்ற வேண்டும்.
  • நூல்கள் எந்த மொழியில் இருப்பினும் இருக்க, கற்பித்தலும் கற்றலும் தாய்மொழியில் இருத்தல் கடமை என்ற தெளிவுதான் இன்று தமிழ்நாட்டு அறிஞர்க்கு,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/210&oldid=1224466" இலிருந்து மீள்விக்கப்பட்டது