பக்கம்:அறவோர் மு. வ.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

29


போர்த்தலைவனைப் புகழக் கூச வேண்டும். ஓவியமாக்க, சிற்பமாக்க, மற்றக் கலைகள் ஆக்கக் கூச வேண்டும்."
- அந்த நாள், பக். 88

போர்க் குழப்பங்களிலிருந்து மக்களின் உயிர்களைக் காப்பாற்ற ஒரு புத்தகம் தேவை. ஒரு கல்லூரி தேவை. இவை இரண்டும் இல்லாத நிலையைக் கண்டு மனம் வெதும்பும் டாக்டர் மு. வ. அவர்களை - அறவோர் மு. வ. அவர்களை,

"பணத்தைக் காப்பாற்றுவதற்குதானே பெரிய பெரிய சட்டப் புத்தகங்கள் எழுதி அச்சிட்டு, அவற்றைப் படிக்கப் பெரிய பெரிய கல்லூரிகள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். உயிரைக் காப்பாற்றுவதற்கு - போர்த் தொல்லையிலிருந்து - போர்க் குழப்பங்களிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரு புத்தகமும் காணோம். ஒரு கல்லூரியும் காணோம்"
- அந்த நாள், பக். 124

என்ற ‘அந்த நாள்' பகுதி படம் பிடிக்கின்றது.

வாழ்க்கை

டாக்டர் மு. வ. அவர்கள் குடும்ப வாழ்க்கையை மிகவும் மதித்துப் போற்றும் பண்புடையவர். இதனை,

"எனக்கு ஆணும் பெண்ணுமாகக் குடும்பங்கள் அன்பாக வாழ வேண்டும் என்பதில் ஆசை உண்டு. ஏன் என்றால் கணவனும் மனைவியுமாக அன்பாக வாழும் வாழ்க்கை இல்லை என்றால் காட்டில் உள்ளதைவிட நாட்டில் கொடுமையான விலங்குத்தன்மை இருக்கும். அதாவது உலகத்தில் பாதிப்பேர் பைத்தியக்காரர்களாக இருப்பார்கள். ஆகையால் எப்போதுமே நான் காதல் வாழ்க்கையை ஆதரித்து வருகின்றேன். தோட்டத்தில் ஒரு முல்லைக்கொடி செழித்து
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/32&oldid=1236333" இலிருந்து மீள்விக்கப்பட்டது