பக்கம்:அறவோர் மு. வ.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அறவோர் மு. வ.

"உள்ளதைக் கொண்டு மகிழ வேண்டும். வியாபாரம் செல்வம் இவற்றில் மட்டும் அல்ல; மனைவியோடு வாழும் வாழ்க்கையிலும் இது வேண்டும். சில இளைஞர்கள் காலைமாலை இரண்டுவேளையும் பூசை கோயில் வழிபாடு எல்லாம் ஓயாமல் செய்து கடவுளிடம் நிறையப் பயன் எதிர்பார்த்து எதிர்பார்த்துத் திடீரென்று ஒருநாள் நாத்திகர் ஆகிவிடுகின்றார்களே தெரியுமா? அப்புறம் சாமியாவது பூதமாவது எனபார்கள். அதுபோல் மனைவியிடம் அளவுக்கு மீறிய அன்பு பணிவு அடக்கம் ஒழுக்கம் அழகு ஆர்வம் எல்லாவற்றையும் எதிர்பார்த்தாலும் இப்படித்தான் கடைசியில் ஏமாந்து வருந்த வேண்டி ஏற்படும்"
- அகல் விளக்கு, பக். 347

என்ற பகுதியில் எதிர்பார்ப்பு என்பது ஏமாற்றத்திற்கு அறிகுறி என்பதை உணர்த்துகின்றார். கணவன் மனைவியிடம் உள்ள குறைகளையே போற்றாமல் குணங்களையும் கண்டு அவற்றுள் மிகை நாடி மிக்க கொள வேண்டும் என்பதை,

"உங்கள் (எதிர்கால) மனைவியிடம் குற்றம் காணும் போது குணத்தையும் காணுங்கள். மிகைநாடி மிக்க கொள்ளுங்கள்"

எனக் கரித்துண்டு நாவலில் நுவல்கின்றார்.

மனைவிக்கு

கணவனுக்குக் கூறும் அறவுரைகளைவிட மனைவிக்குக் கூறும் அறவுரைகளே மிகுதி ! இல்லத்தை ஆள்பவள் இல்லாளே ஆதலின் அவள் கடமைகளையே பெரிதும் வற்புறுத்துகின்றார். கணவனின் மனம் அறிந்து நடப்பவளே நல்ல மனைவி என்பதை,

"கணவன் கணவன் என்று வாயால் சொல்லிக் கொண்டிருப்பவள், கணவன் படத்தையே எந்நேரமும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/41&oldid=1236337" இலிருந்து மீள்விக்கப்பட்டது