பக்கம்:அறவோர் மு. வ.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

53

என்று நவில்கின்றார். இப்படிப்பட்ட வாழ்க்கையில் மனிதர்களின் தொடர்பு கசக்கும் நாள் வரும்போது கருத்துகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், "உயர்ந்த புத்தகங்களின் கருத்துகள் என்றுமே கசப்பதில்லை" (வாடாமலர், பக். 278) என்று வாடாமலர் நாவலில் காரணம் கூறுகின்றார். மனித வாழ்க்கையில் அவன் தான் ஆற்ற வேண்டிய கடமையை நம்பிக்கையோடு செய்து வர வேண்டும் என்று மொழிகின்றார்.

"பெரும்பாலோர் திருந்தும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு கடமையைச் செய்ய வேண்டும். இன்று பயன் குறைவாகவே இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், கடமையைச் செய்து வருவோம். செய்ய முடியாவிட்டால் சொல்லி வருவோம். காலம் வரும்போது பயன்படும்."
- வாடா மலர், பக். 171. 72

சீர்ப்படாத உலகத்தில் சீர்ப்பட்டவர்கள் பிறந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கயமை என்ற நாவலில்

"ஒரு வழி, நஞ்சு குடித்துச் சிலுவையில் நின்று, அல்லது துப்பாக்கிக்கு இரையாகி மறைய வேண்டும். மற்றொரு வழி, உலகம் பொல்லாதது என்று இதைவிட்டுத் துறந்து காட்டுக்கு ஓடிப் போய்க் கண்மூடி மவுனியாகிக் காலம் கழிக்க வேண்டும். மூன்றாவது வழி உலகம் திருந்த வேண்டும் என்று உண்மையான ஆர்வத்தோடு அதற்கு வேண்டிய வித்துகளைத் தூவிக் கொண்டு கடமையை அமைதியாகச் செய்து கொண்டிருக்க வேண்டும்"
- கயமை, பக். 103

என்று மூன்று வழிகளைக் கூறியுள்ளார். இவற்றில் மூன்றாவது வழியே மு. வ. அவர்கள் கடைப்பிடிக்கும் - கடைப்பிடிக்க வற்புறுத்தும் நெறி.

மனிதனாகப் பிறந்தவன் ஊர்ப்பழிக்கு அஞ்சுதல் கூடாது. அந்த அச்சம் அவனை ஒன்றும் செய்யவிடாமல்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/56&oldid=1209938" இலிருந்து மீள்விக்கப்பட்டது