பக்கம்:அறவோர் மு. வ.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அறவோர் மு. வ.

தடுப்பதோடு அவனைக் கோழையாகவும் மாற்றிவிடும் என்பதை,

“நான் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன். ஊராரின் பழிக்கு அஞ்சுகிறவன், தனக்கு ஒன்றும் செய்து கொள்ள முடியாது. மற்றவர்களுக்கும் உதவி செய்ய முடியாது. எவ்வளவு ஒழுங்காக நடந்தாலும் ஊராரின் வாய் ஏதாவது உளறிக் கொண்டேதான் இருக்கும். அதற்குப் பயந்தால் கோழையாகத்தான் வாழ முடியும்"
- கயமை, பக். 66

என்ற பகுதியில் விளக்குகின்றார்.

பணத்திற்கு மதிப்புத் தரும் தனிமனிதனை - குடும்பத்தை - சமூகத்தை - உலகத்தை நோக்கி,

"பணம் என்றால் அதற்கு ஒரு தனி மதிப்பு உலகத்தில் உள்ள வரையில் அதைச் சும்மா விடக்கூடாது. விட்டால் புத்தர், ஏசு, திருநாவுக்கரசர், காந்தி போல் அடியோடு விட்டுத் தொலைக்க வேண்டும். இல்லையானால் பணத்திற்கு நாம் அடிமையாகாமல் நமக்கு அதை அடிமையாக்கிக் கொண்டு ஆட்டிப் படைக்க வேண்டும். பொன்னாசை தனியாட்களைக் கெடுக்கும். தவிர அது இயற்கையாகவே கடவுளால் மனிதனுடைய நாடி நரம்புகளில் சேர்த்துப் படைக்கப்பட்டது. பொன்னாசை தனியாட்களைக் கெடுப்பதோடு நிற்கிறதா? குடும்பம் குடும்பமாக, சமூகம் சமூகமாக உலகத்தையே கெடுத்து வருவது பண ஆசைதானே!"
- மலர்விழி, பக். 74

என்று பண ஆசையின் விளைவினை - கொடுமையினை எடுத்துக்காட்டுகின்றார்.

"முதலாளிகளைப் பற்றி உன் வாயால் எங்கும் எப்போதும் எவனிடத்திலும் குறை சொல்லாதே"
-மண் குடிசை, பக், 112
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/57&oldid=1209940" இலிருந்து மீள்விக்கப்பட்டது