பக்கம்:அறவோர் மு. வ.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அறவோர் மு. வ.

அறவழி நின்றவர்

அறவழி அமைத்துக் கொடுத்த சான்றோர் மட்டும் அல்லர்; பிறர் காட்டிய வழியில் தாமும் நடந்து காட்டிய அறவோர் அவர். வள்ளுவர், தாயுமானவர் முதலிய அறவோர்களின் நூல்களை என்றுமே இவர் மறந்ததில்லை.

"உடைகளும் படுக்கையும் கண்ணாடி முதலானவைகளும் தவிர வேறு சாமான்கள் எங்களிடம் இல்லாததால் எடை மிகுதியாவதற்குக் காரணமே இல்லை. திருக்குறளும் தாயுமானவரும் தவிர வேறு நூல்களும் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை அல்லவா?"
-யான் கண்ட இலங்கை, பக். 8

கொண்ட கொள்கையை விடாது போற்றும் அறநெறியாளர்

"அந்த விமான மங்கை காப்பி நிறைந்த குவளைகள் கொண்டு வந்தாள். நன்றி தெரிவித்துப் பழக்கமில்லை என்றேன். வேறு பழச்சாறு, தேநீர் ஏதேனும் வேண்டுமா என்றாள். பால் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்."
-யான் கண்ட இலங்கை, பக். 23
"நான் காந்தி வழியில் நடப்பவன். அவர் அம்மை குத்திக் கொள்ளக் கூடாது என்று பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார். நான் அவருடைய கொள்கையை நம்புகிறவன். என்னைப் போன்றவர்களுக்கு விதி விலக்கு இல்லையா? என்றேன்."
-யான் கண்ட இலங்கை, பக். 39

இப்பகுதிகள் கொள்கையை விடாத அறநெறியாளர் மு. வ. வை நமக்குக் காட்டுகின்றன. இங்குக் குறிப்பிட்ட பகுதிகள் சிலவே. தனிவாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த அறநெறிகளை அவருடன் பழகிய அனைவரும் நன்கு தெளிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/61&oldid=1209982" இலிருந்து மீள்விக்கப்பட்டது