பக்கம்:அறவோர் மு. வ.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

71


கருவாக (Plot) அமைய முடியும். ஆயின் அக்கருவிற்கு உணர்ச்சியூட்டிச் சிறப்பித்தல் கதையாசிரியரின் திறனே ஆகும். 'கரு'வைச் சிதைக்காவண்ணம் பின்னப்படுகின்ற திறனே கலைத்தன்மை வாய்ந்த படைப்பினை உருவாக்கவல்லது.

டாக்டர் மு. வ., தாம் காண விழைகின்ற சமுதாயத்திற்கான புரட்சிக் கோட்பாடுகளையும், வாழும் நிகழ்காலச் சமுதாயத்திற்குத் தேவையான சீர்திருத்தச் சிந்தனைகளையும், குடும்ப உறவில் அணுகிச் செல்ல வேண்டிய நெறிகளையும் எடுத்துரைத்து மனித வாழ்விற்கான புதிய பாதைகளைக் காட்டியுள்ளார். இன்றைய நடைமுறை வாழ்வில் சந்திக்கின்ற சிக்கல்களைக் கூர்ந்துநோக்கிச் சமுதாய நலவுணர்வுடன் அவற்றையே கருக்களாக்கி நாவல் புனைந்துள்ளார்.

காதலின் பல்வேறு கோணங்களைச் சித்திரித்துக் காட்டுவது 'செந்தாமரை'. தாய்மையின் ஆற்றலைப் புலப்படுத்துவது 'பெற்ற மனம்'. 'கள்ளோ காவியமோ?' பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற இன்னல்களை வடிப்பது. 'கரித்துண்டு' கலைமனத்தின் உணர்வைப் புலப்படுத்துவது. உணர்ச்சிக்கும் அறிவிற்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை - இளைஞர்களின் போக்கைப் புலப்படுத்துவது 'அகல் விளக்கு'. நாடு கடத்தப்பட்ட மக்களின் துன்பத்தை - வரலாற்று நிகழ்ச்சியை வடித்துக் காட்டுவது 'அந்த நாள்’. 'கயமை' அரசு அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளை நடுவண் சிந்தனையாக்கிப் புனையப்பெற்றது. மலர்விழி, அல்லி, நெஞ்சில் ஒரு முள், வாடாமலர் குடும்ப உறவில் ஏற்படுகின்ற உறவுச் சிக்கலையும், உணர்வுச் சிக்கலையும் விவரிப்பன.

கருத்தும் கலையும்

நாவல் என்பது இன்றைய அறிவியல் இணைந்த வேகமான காலகட்டத்தில் அமைந்துள்ள வாழ்க்கையைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/74&oldid=1462051" இலிருந்து மீள்விக்கப்பட்டது