பக்கம்:அறவோர் மு. வ.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அறவோர் மு. வ.


சித்திரித்துக் காட்டும் இலக்கிய வடிவமாகும். இத்தகைய படைப்பிலக்கியம் எந்த அளவுக்கு வாழ்வோடு தொடர்புடையதாக அமைகிறதோ அந்த அளவுக்கு அப்படைப்புக்கு வாழ்வு அமைகிறது. பேராசிரியர் கல்கி அவர்கள் 'கதையில் கதையும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அது கதையாகவும் இருக்கக் கூடாது’ என்பார். எனவே, நாவல் என்பது பொய்மையற்றதாகவும், புனைவதுடையதாகவும் அமையவேண்டும் என்பது புலனாகிறது. கலைநயம் கெழுமிய, கற்பனை இணைவுடன் வாழ்க்கையின் வார்ப்பாக அமையவேண்டும் நாவல்; அப்போதுதான் படைப்பின் பயன் சமுதாயத்திற்குரியதாகும்.

"கலையை விரும்புவோர் இருவகை. பொழுது, போக்குக்காகச் சிலர் விரும்புவார்கள்; சிலர் கலை தங்களை உயர்த்துவதற்கும் வாழ்க்கையில் புதுவழியைக் காண்பதற்கும் உதவும் கருவியாகப் பயன்படுத்த எண்ணுவார்கள். கலையை, வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்சியைச் சார்ந்தவன் நான். ஆகையினாலேயே தான் என் கதையில் கருத்தையும் சேர்த்து வருகின்றேன்"10 என்ற கருத்தினர் டாக்டர் மு. வ. தனிமனித வாழ்வு என்பது சமுதாயத்தின் போக்கிற்கேற்ப வடிவம் பெறுவது. சமுதாயமும் மனிதனுக்குச் சிக்கல்களைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். அதனால் மனிதன் சிக்கல்களிலிருந்து ஒதுங்கியும் தப்பித்தும் வாழ முற்படுகின்றான். அதுதான் வாழ்க்கை11 என்றும் கருதுகிறான் (மலர்விழி). மனிதன் சிக்கலின்றி வாழ வேண்டும்: அல்லது சிக்கலைத் தீர்க்கின்ற மனப்பக்குவத்தையாவது பெற வேண்டும். சமுதாயத்தின் பிற்போக்குத்தனமான ஏற்பாடுகளை, எதிர்பார்ப்புகளை உடைத்தெறிய வேண்டும் என்னும் நோக்கில் சிந்தித்தார் டாக்டர் மு. வ. எனவே தான், தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும், தனி மனிதனுக்கும் அகவாழ்வுக்கும் ஏற்படுகின்ற சிக்கல்களைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/75&oldid=1462052" இலிருந்து மீள்விக்கப்பட்டது