பக்கம்:அறவோர் மு. வ.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

73

சமுதாய வித்தகராய் நின்று அணுகினார். அம்முயற்சியின் விளைவு தாம் அவருடைய கலையும் கருத்தும்.

டாக்டர் மு. வ. தம் நாவல்கள் அனைத்திலும் கருத்துகளை எதிரொலிக்கும் பாத்திரங்களாகவே படைத்துள்ளார் என்றும், சில இடங்களில் கட்டுரையாளராகவே நாவல்களில் விளங்குகிறார் என்றும், மு. வ. வின் கலைப்படைப்புகளைக் குறை காண்பது உண்டு, டாக்டர் மு. வ. வின் பாத்திரங்களான அறவாழி, செல்வநாயகம், முருகையா, கமலக்கண்ணன் ஆகியோர் பண்பு நலனுக்கேற்பச் சமுதாயச் சிக்கல்களுக்கும், வாழ்வின் அகப்போராட்டங்களுக்கும் தீர்வு காண்கிறார்களேயொழிய, நேரத்திற்கு வந்து மேடையேறி கருத்துரை வழங்கிச் செல்லும் பேராசிரியர்களாகப் படைக்கப் பெறவில்லை என்பது கருதத்தக்கது.

டாக்டர் மு. வ. அவர்களே நேரில் வந்து பேசுவதாகக் கருதி மு. வ. வின் நாவல்களை வெறும் கருத்துரை நாவல்கள் என்று தரம் மெலிந்த தன்மையாக மதிப்பிடுவோர் உளர். ஆழ்ந்து நோக்கும்போது எந்தக் கருத்தை எடுத்துரைக்கும்போதும் பாத்திரத்தின் பண்புநலனுக்கும், போக்கிற்கும் நாவலின் பாங்கிற்கும், நிலைக்கும் ஏற்ற வண்ணமே பேசவைக்கப்பட்டுள்ளனரே தவிர, பண்புக்கும் கருத்துக்கும் முரணான பாத்திரங்கள் மீது கருத்துகளைத் திணிக்கவில்லை என்பது நினைவுகூரத் தக்கதாகும். உரையாய் உத்தியைக் கொண்டே பாத்திரங்கள் கருத்துகள் வழங்கப் பெற்றுள்ளன என்பதும் டாக்டர் மு. வ. கருத்தறிவுப்புத் திறனில் நோக்கத்தக்கதாகும்.

“படித்த இளைஞர்களும் பண்புள்ள அழகிகளும் பணத்திற்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூற முடியாது. திருமணக் காலங்களில் குடும்பங்களில் நடக்கும் பேச்சைக் கேட்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/76&oldid=1234999" இலிருந்து மீள்விக்கப்பட்டது