பக்கம்:அறவோர் மு. வ.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அறவோர் மு. வ.

இந்த நாட்டிற்கு ஆத்மீகத் தொடர்பு மிகுதி என்று சொல்வதற்கு வாய் கூசும்”12 (அகல் விளக்கு).

முரண்பாடுகளின் முழுவடிவமாகிப் போய்விட்ட அவலத்தையும், பணமே வாழ்க்கையின் குறிக்கோளாக்கி-முறையற்ற தன்மையில், மனிதத்தன்மையற்ற வகையில் செல்லும் சமுதாயத்தின் போக்கையும் கண்டிக்கின்றார் மு. வ. மேலும் கலைப்பாங்கைச் சிதைக்காவண்ணம் பாத்திரத்தின் பண்புநலனையொட்டிக் கருத்தை வழங்கியுள்ளமையும் அறியத்தக்கதாகும்.

'திருமணமாகி இல்வாழ்க்கையில் ஒரளவு பெற்ற அனுபவம் போதும். அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி எஞ்சிய வாழ்க்கையை மற்றவர்களுக்கு வழிகாட்டும் வன்கயில் வாழ்ந்தால் போதும்' என்று 'அல்லி'யில் உரைத்த மு. வ., அக்கருத்தின் வடிவமாக அகல்விளக்கில் பாக்கியம் அம்மையாரைப் படைத்துக் காட்டியுள்ளார். அந்த அம்மையார் அருட்பா, கைவல்லியம், இராமதீர்த்தரின் அறிவுரைகள், மணிமேகலை வாசகம், சத்திய சோதனை, தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றைப் படித்ததால் அன்பும், பண்பும் தனிமையில் இனிமையும் பெற்றதாகப் படைத்துக் காட்டுகிறார்.

வடிவத்தால் மட்டுமின்றி, சமுதாயத்தை அணுகி, விளக்கம் கூறுகின்ற முறையாலும் புதுமையைக் காணும் போதே உரைநடைக் காப்பியமான 'நாவல்' புதினமாகும். பழந்தமிழ் இலக்கியத்திலும், பண்பாட்டிலும் தோய்ந்து வளர்ந்த டாக்டர் மு. வ. புதிய இலக்கிய வடிவத்தைப் பயன்படுத்தி, வெற்றி கண்டார். நாவலாசிரியர் என்பவர் உள்ளதை உள்ளவாறு, உணர்ந்தவாறு சித்திரிப்பவர் மட்டும் அல்லர்: உணர்த்த விரும்பியவாறு சித்திரிக்க வல்லவரே; வேண்டியவரே ஆவார். கற்புக்கு மு. வ. தரும் விளக்கம் புதுமையானது மட்டுமன்று; புரட்சியானதுமாகும். 'கரித்துண்டு' என்ற நாவலில் படைப்பாளராக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/77&oldid=1211399" இலிருந்து மீள்விக்கப்பட்டது