பக்கம்:அறவோர் மு. வ.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

81

அறவாழி சிந்தனை வளம் கெழுமிய முழுமை நிறைந்த பாத்திரமாகப் படைக்கப் பெற்றுள்ளார்.

இலக்கியத் திறனாய்வாளர்கள் பாத்திரப் படைப்பை முழுநிலை மாந்தர் (Round Character) என்றும், ஒருநிலை மாந்தர் (Flat Character) என்றும் பகுத்துக் காண்பதுமுண்டு. 18 இப்பகுப்பாய்வுக்கு ஏற்பப் பாத்திரங்கள் படைக்கப் பெற்றுள்ளமையை ஆய்வோர் உணர்வர்.

வடிவம்

எந்த ஒரு தனிமனிதனின் வாழ்வும் எதிர்நோக்குகின்ற வரைபடங்களுக்குள் அடங்குவதில்லையோ அதைப் போலவே நாவலின் அமைப்பிற்கும் ஒரு குறிப்பிட்ட வரன் முறையில்லை. படைப்பாளன் எடுத்துக் கொள்ளுகின்ற கருப்பொருளையும், அதனடிப்படையில் உருவாக்கும் கதைப்பின்னலையும் கொண்டே படைப்பின் அமைப்பு செம்மை பெறுகிறது. எனவே, நாவல்களில் சில பொதுத் தன்மைகள் அமைந்திருந்த போதிலும், ஒவ்வொரு நாவலுக்கும் ஒவ்வொரு வடிவம் உண்டு.

“நாவல் எந்தச் சமுதாயத்தைப் பற்றி எடுத்துரைக்கிறதோ அந்தச் சமுதாயமே பற்பல மாறுதல்களைப் பெற்றுவரும்போது, நாவல் என்னும் இலக்கிய வகை இப்படித்தான் அமையவேண்டும் என்ற இலக்கணம் கூறி வரையறுப்பது பொருந்தா முயற்சியாகும்." 17 என்று கருதுகிறார் ரிச்சர்ட் சர்சு. எனவே நாவலின் வடிவம் பொதுவான நியதிகளுக்கு உட்பட வேண்டியதன்று என்பது புலனாகிறது. கதைப்பின்னலையும், கருப்பொருளையும் சார்ந்து தொடக்கமும், முடிவும் அமையும்போது அவை கலைக்கூறுகளாகப் போற்றப் பெறுகின்றன.

தொடக்கம்

டாக்டர் மு.வ. நாவல்களின் தொடக்கங்கள் சிந்தனையைச் சிலிர்க்கச் செய்வன மட்டுமல்ல; கதையின், கருவைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/84&oldid=1211909" இலிருந்து மீள்விக்கப்பட்டது