பக்கம்:அறவோர் மு. வ.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அறவோர் மு. வ.

குறிப்பால் உணர்த்துவனவுமாகும். பாத்திரங்களின் உணர்வுப் புலப்பாடாக-வருணனைப் போக்கினதாக கருப்பொருளின் குறியீடாக அமைந்துள்ள திறன் குறிக்கத்தக்கதாகும்.

1. கருவின் குறிப்புப் பொருள்

"உலகம் பொல்லாதது; அவர் நல்லவராக இருந்தாலும் உலகம் பொல்லாதது"18 (கள்ளோ காவியமோ?)

"படிப்பு உடம்பை மட்டும் மென்மையாக்குகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அது மனத்தையும் மென்மையாக்குகிறது என்பதை இப்போது நன்றாக உணர்கிறேன்" (நெஞ்சில் ஒரு முள்)

2. பாத்திரங்களின் உணர்வுப் புலப்பாடு

"பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கைகோத்து உலவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள்”. (அகல் விளக்கு).

முடிவு

டாக்டர் மு.வ. நாவல்களின் முடிவு நிலைகள் பெரும்பாலும் கதையின் போக்கையொட்டியனவாகவே அமைந்திருந்தபோதிலும் சில கதைகளின் முடிவுகள் பாத்திரத்தின் போக்கையொட்டி-சமுதாயத்திற்கு உணர்த்தக் கருதும் சிந்தனையின் உருவகத் தன்மையதாய் அமைந்துள்ளன. பாத்திரங்கள் மன உணர்வுகளை நுணுக்கமாக வெளியிடும் திறத்தில் ஆழ்ந்த பார்வையைச் செலுத்தவில்லை என்று குறை கண்டாலும், டாக்டர் மு.வ. வைப் போல் அளப்பரிய சிந்தனைகளை நாவல் வரலாற்றில் கலைப்பாங்கோடு வழங்கியவர் மிகச் சிலரே.

அகல் விளக்கில் இடம்பெறும் சந்திரன் உணர்ச்சியின் உருவகம். எந்த முடிவுகளையும் சிந்தனையில் உராய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/85&oldid=1211910" இலிருந்து மீள்விக்கப்பட்டது