பக்கம்:அறவோர் மு. வ.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அறவோர் மு. வ.

வாயிலை ஏற்படுத்தியுள்ளார். 'சோமு’ உயிரோடு இல்லாத காரணத்தால், அல்லி நாட்குறிப்பு வழியே அவுன் உணர்ச்சியை அறிவதாகக் கதைப்பின்னலை அமைத்தமை மேலும் 'அல்லி'யில் கலைத்திறனை உயர்த்தியுள்ளது. அவ்வாறே 'அல்லி'யில் இடம்பெறும் 'இன்பவல்லி’ யின் மனப்போராட்டத்தைக் கடித உத்தி மூலம் புலப்படுத்தியுள்ளமை மு. வ. வின் கலைத்திறனுக்கு ஒரு முத்தாய்ப்பு என்றே கூறலாம். அகநோக்கில் அமைந்த 'அல்லி'யில் உள் அகநோக்குநிலை உத்திமுறைகளைப் பயன்படுத்திப் பண்பாட்டு அடிப்படையிலும், உளவியல் பாங்கிலும் கதைப்பின்னலை உருவாக்கியிருக்கும் திறன் வியக்கத்தக்கதாகும்.

மு. வ. வின் கலைமேம்பாட்டுப் படைப்பாகக் கருதப்படும் 'கரித்துண்டு' நாவலில் சிறையில் மோகன் தன் கதையைச் சொல்வதாகவும், கடிதத்தின் மூலம் நிர்மலா எழுதுவதாகவும் அமைத்திருக்கும் போக்கு நோக்கு நிலையைக் கையாளும் நுண்மாண் தன்மையைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது எனலாம்.

தலைப்பு உத்தி (குறிப்புத்திறன்)

கதை மாந்தர்களின் பண்புநலன்களையொட்டி அவர்களுக்குப் பெயரிட்டுக் குறிப்பால் உணர்த்துவதைப் போல் சமுதாயப் போக்கையொட்டித் தம் நாவல்களுக்குப் பெயர் வழங்கியுள்ளார். நாவல்களுக்குத் தலைப்பிடுதல், பாத்திரங்களுக்குப் பெயரிடுதல் ஆகியவற்றுள் குறிப்புத் திறனைப் புலப்படுத்தியுள்ளமைபோல் டாக்டர் மு. வ. கதைப்பின்னலையொட்டி, சில காட்சிகளைப் படைத்துக் காட்டி அவற்றினுள்ளும் குறிப்புப் பொருளை ஆழ்ந்து நோக்குவோர் உணரும்வண்ணம் படைத்துள்ளார்.

குறிப்புப் பொருளின் ஆழ்திறத்தை நன்கு வெளிப்படுத்தும் டாக்டர் மு. வ. வின் நாவல்கள் கரித்துண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/89&oldid=1224070" இலிருந்து மீள்விக்கப்பட்டது