பக்கம்:அறவோர் மு. வ.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

89

டாக்டர் மு. வ. கதைப்போக்கை- கதையில் நிகழப் போகும் மாற்றத்தைக் குறிப்புப் பொருள் வாயிலாகவும் இயற்கைக் காட்சிகளைச் சுட்டுவதன் வாயிலாகவும், பாத்திரங்களின் உரையாடல்கள் வாயிலாகவும் உணர்த்திச் செல்வதுண்டு. அகல்விளக்கில், முன் முரண் பாத்திரமாகப் படைக்கப் பெற்ற சந்திரன் நெறியிலே மாற்றம் ஏற்படப் போவதையும், சீர்கெட்டுவிடப் போவதையும் சாமண்ணாவின் கருத்துரை வாயிலாக உணர்த்திச் செல்கிறார்.

'பட்டணத்துப் பக்கம் போனால் பிள்ளைகள் கெட்டுப் போகாமல் திரும்புவதில்லை. அங்கே போய்ச் சில நாள் தங்கி வந்தால் போதும். சினிமா, ஓட்டல், கச்சேரி, ஆட்டக்காரிகள், குதிரைப் பந்தயம், இப்படிப் படிப்படியாகக் கெட்டுப் போய்க் கடைசியில் ஒட்டாண்டியாவதற்கு வழிதேடிக் கொள்கிறார்கள். அந்தப் பட்டணத்து வாழ்வும் வேண்டா; அதனால் வரும் படிப்பும் வேண்டா'23 (அகல் விளக்கு) என்னும் உரையாடல் வாயிலாக ஒழுக்கத்தின் வடிவமாக இருந்த சந்திரன்' பின்னால் காதலால் சீரழிந்து திசைமாறித் தொழுநோயாளனாக மாறிடும் அவலத்திற்கு ஆளாகிறான். (அகல் விளக்கு).

நிகழ்ச்சி உத்தி

நாவலாசிரியர்கள் கதைத் தொடர்பான உணர்வையோ, கதை முடிவையோ, பாத்திரங்களின் போக்கையோ, கதையில் நிகழப்போகின்ற மாற்றத்தையோ உணர்த்தக் கதைப் பின்னலையொட்டிச் சில நிகழ்ச்சிகளைக் காட்டிச் செல்வர். இத்தகைய நிகழ்ச்சி உத்திகள் கதைப் பின்னலுக்கும் பாத்திரப் படைப்புக்கும் விலகி நின்று எடுத்துரைக்கப்படுமானால், கலைப்பாங்கின் கட்டுக் கோப்பையே குலைப்பதாகிவிடும். டாக்டர் மு. வ. பாத்திரத்தின் போக்கையும் பண்பையும் மற்றப் பாத்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/92&oldid=1214343" இலிருந்து மீள்விக்கப்பட்டது