பக்கம்:அறவோர் மு. வ.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அறவோர் மு. வ.

இவ் ஒரு மனிதனின் - வாழ்க்கையின் - பணியின் முடிவுரையாகவே உள்ளது.

நிலை வருணனை

"இந்த வாசற்படியில் வீணுக்குச் செலவாகியுள்ள குங்குமம் முதல் அங்கே உலர்ந்து கொண்டிருக்கும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை வரையில் எல்லாம் அவளுக்குச் சுற்றுப்புறத்தார் தரும் மதிப்புக்காக இருப்பவை" (செந்தாமரை).

பாத்திரத்தின் மனப்போக்கை வருணிப்பதாகயிருந்த போதிலும், சமுதாயப் போக்கிலே - நடைமுறை வழக்கங்களிலே காண வேண்டிய மாற்றம் குறித்து மறுமலர்ச்சி இழையோட்டச் சிந்தனையையும் வெளியிடுவதாக அமைந்துள்ளது.

சிந்தனைகளின் திடத்தன்மையைப் பெற்றவைகளாக டாக்டர் மு.வ.வின் நாவல்கள் விளங்கியபோதிலும் அச்சிந்தனைகள் அனைத்தும் வெறும் கருத்துப் பிரச்சாரம் என்றோ நீதி நாவல் என்றோ வகுத்துக் காண்கின்ற அளவுக்குக் கலைத்தரம் மெலிந்த தன்மையோடு வெளியிடப்படவில்லை என்பது குறிக்கத்தக்கது. படைப்பு எல்லையில் நின்றே பல்வேறு உத்திமுறைகளைக் கையாண்டு படைப்பையும், படைப்பின் கருத்தையும் வெளியிட்டு வெற்றி கண்டுள்ளார் டாக்டர் மு. வ.

நடை

டாக்டர் மு. வ. வின் கலைப்படைப்புகளுக்கும், கருத்துப் படைப்புகளுக்கும் மக்கள் மன்றத்திலிருந்து அறிஞர்கள் மன்றம் வரை மகத்தான வரவேற்பினைப் பெறச் செய்தது, அவர்தம் நடை ஆகும். கலைத்திறனும், கருத்துப் பொழிவும், நடைத் தன்மையுமே அவர்தம் படைப்புகளுக்கு அணிசேர்த்த கூறுகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/95&oldid=1224086" இலிருந்து மீள்விக்கப்பட்டது