பக்கம்:அறவோர் மு. வ.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அறவோர் மு. வ.

கலையின் நோக்கமெனக் கொண்டிருந்த டாக்டர் மு. வ. படைப்புகளின் கருவால், கருத்தால் மட்டுமின்றி, நடையாலும் சமுதாயத்தின் அவலத்தைப் புலப்படுத்தியுள்ளார்.

"பிறர்க்கு ஒரு பயனும் இல்லாமல் அழகாக, உடம்பை வளர்த்துத் தூங்கும் வட்டி வாங்கிகளைப் போல் மேற்கு நாட்டுக் குரோட்டன் என்று சொல்லப்படும் சில செடிகள் பலநிற இலைகளோடு வளர்ந்து தோட்டக்காரனுடைய உழைப்பைப் பெற்றுக் கொண்டிருந்தன" . (பெற்ற மனம், ப. 6)

எளிய உவமை

பாத்திரங்களின் உணர்வைப் புலப்படுத்த, ஆழமான மன அசைவுகளை வெளிப்படுத்த, நிலைகளை உயர்ப்பித்துக் காட்ட எளிய உவமைகளைப் பயன்படுத்தியுள்ள பாங்கு போற்றத்தகுந்த கலைக் கூறாகும்.

"நேராகக் குழாயில் வரும் தண்ணீரைக் கையால் அடைக்க முயலும் நாற்புறமும் தண்ணீர் சிதறிக் குழந்தையின் சொக்காயை நனைப்பதுபோல், அவனுடைய உள்ளத்தின் ஆழத்தில் இருந்த கவலை நேரே வராமல் சுற்றிச் சுற்றி வெளிப்படுவதைத் தெரிந்து கொண்டேன்" . (மலர்விழி, ப. 47)

பாமரர் நடை

'அந்தப் பிள்ளை படிக்கப் போயிருக்குதாம் பட்டனத்துக்கு' என்று கிழவி கூறியதும், 'போனதே நல்லதுதான். இந்த ஊரில் இருத்தால், கொழுத்துப் போன பெண் கழுதைகள் அதைக் கெடுத்துவிடும். அதுவும் பெரிய வீட்டுப்பிள்ளை என்றால் சொல்லத் தேவையில்லை' என்று கிழவன் மறுமொழி கூறினான். உடனே கிழவி 'இன்னுமா அந்தப் பிள்ளையைக் கெடுக்காமல் இருக்கிறார்கள். உனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எல்லோரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/99&oldid=1224098" இலிருந்து மீள்விக்கப்பட்டது