பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

ஆணொடு பெண்தம் வீட்டில் அளவுடன் பழகுங் காறும்.
பேணிடும் பெரியோர்க் கெல்லாம் பெருமைதான்! பெரிதும்

கண்டு

நாணிடு மளவில், வேணி நாட்டமும் நடையும் நாளும்
கோணிடல் செயவே, கோதை கோபத்தைச் செய்தாள்

நெஞ்சில்!


கணவனும் மனைவியும் கலந்துரையாடல்பஞ்சணை மீதில் சத்யன் பரிவுடன் குந்தி, “இன்றென்
அஞ்சுகம் அதரப் பூக்கள் அலராத தேனோ?” என்னப்
“பிஞ்சுக ளிரண்டும் முற்றிப் பெண்ணாணாய்ப் பழகல் கண்டென்
நெஞ்சில்முள் தைத்த தென்ன நிலைகுலைந் திட்டே” னென்றாள்.

“குடகதில் மழைதான் கொட்டின் கோவையைக் கொளும்நீ

ரென்றே

கடுகதைக் காம்பு கட்டிக் கத்தரிக் காயாக் காதே!
படகதை நதிமீ தன்றிப் பள்ளத்தில் விடவேண் டாம்; நீ
விடுகதை போடல் விட்டு விசயத்தை விளக்கு” கென்றான்.

மாணிக்கம் மாற்றம் கூறல்“குடித்தன மின்ன தென்றோ? குடும்பமித் தகைய தென்றோ?
எடுத்துமக் கியம்பத் தக்கோ ரில்லாத குறையீ தொன்று!
தடித்தனப் பேச்சே போதும் தரணியில் வாழ்வுக் கென்றல்
கெடுத்தனம், நம்மை நாமே கேளிரோ டென்கின் றேன்நான்

‘பிணமிலா ஈமத் தைப்பேய் பிரியாத கதைபோல், காமம்
மணமிலாப் பருவ மாந்தர் மனங்காக்கு’ மென்பர், மானம்
குணமிலாக் குமரி தன்னைக் கோமகன் கொள்ளக் கூடும்!
பணமிலாப் படிறன் தன்னைப் பாவையும் விரும்பப் பண்ணும்!
 
‘நன்மையை நலிக்கும்; வாழ்வில் நடக்ககூடாத, நாசப்
புன்மையைப் புரியச் செய்யும்! புகழ்வதற் கேது வாம்பொன்
தன்மையைத் தகர்க்கும்; தாழாத் தலையையும், தாழ்த்தும்;

தாங்கா

வன்மையிப் பசிக்கு வாய்த்த வரப்பிர சித்தி’ என்பர்.