பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

"ஊனனு முரைக்கின்‌ கேட்பா னுளமவ னுக்குண்‌ டுள்ளேடு;
ஈனனும்‌ 'பணம்கா' சென்றால்‌ எதைச்சொன்ன போதும்‌ கேட்பான்‌;
வானர மதுவும்‌ கேட்கும்‌ வசமாக்கி வளர்த்து வைத்தால்‌;
கேனனுக்‌ கெச்சொல்‌ கொண்டு கேம்மிப்ப தப்பா," வென்றார்‌.

மகள் தனது மனக்குறிப்‌ புணர்த்தல்‌



தந்தையின்‌ சொற்கள்‌, தன்னைத்‌ தடுமாற வைத்த தேனும்‌,
சிந்தையிற்‌ சிறுமை யில்லாச்‌ செல்விசிந்‌ தனைசெய்‌ தாளாய்‌,
"வெந்ததைத்‌ திருப்பிப்‌ பின்னும்‌ வேகவைப்‌ பதுவீ ணப்பா!
வந்ததற்‌ கொருபேர்‌ வாக்காய்‌ வைத்துச்செல்‌ லுங்க" ளென்றாள்‌.

கருத்தினை மறைத்துக்‌ காட்டும்‌ கண்ணன்ன மகள்சொல்‌ கேட்டுச்‌
சிரித்தவ ராழ்ந்து சற்றுச்‌ சிந்திக்க லானார்‌; செல்லாத்‌
தரித்திரம்‌ பிடித்த இந்தத்‌ தறுதலை தனக்கும்‌ கூட
ஒருத்திபெண்‌ டாட்டி யாதற்‌ குலகத்தி லுதித்தா ளென்றே.

மாணிக்கம்‌ வேணிக்குதவல்‌



தேடத்தான்‌ கூடாச்‌ செல்வத்‌ திருமணச்‌ செய்தி பற்றி
மாடத்தில்‌ கூடிப்‌ பேச மனமின்றி வந்த செல்வி,
"நீடித்துப்‌ போகும்‌ நேரம்‌; தித்யனுக்‌ குணவு கொண்டு
வாடித்தான்‌ போகா முன்போய்‌ வழங்கிவா வேணி! யென்றாள்‌.

வார்த்தையாய்‌ வகுத்துச்‌ செல்வி வழங்கிய பணிதான்‌ , 'வாழ
நேர்த்தியாய்ப்‌ பருக நேர்ந்த நிகரற்ற அமிழ்தே' யென்கோ!
சேர்த்தியாய்ச்‌ சிவக்கக்‌ கன்னம்‌ சிந்தையு முவக்க வேணி,
பூர்த்தியாய்த்‌ தனது மேனி பூரித்துப்‌ புளகம்‌ போர்த்தாள்‌.