பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

காந்தமக் கன்னி யாகக் கரும்பொன்னாய்க் கருகிக் கையா
லேந்தித்தன் நெஞ்சி னிக்க இணைத்திட எண்ணி னோனும்,
சாந்தத்தை யுற்றுத் தன்னைச் சரிசெய்து கொண்டு சார
வேந்தொத்து நின்றான், நெற்றி வியர்வினைத் துடைத்த வாறே,

நெற்றங்கு வயல்கட் கெல்லாம் நீர்தந்து கொண்டு செல்லும்
புற்றங்கு கால்வா யோரம் பொதுளிய புங்கு நீழல்,
விற்றங்கு புருவ வேணி விருப்பமாய் வந்து தங்கக்
கற்றங்கு நீரில் தன்கை கால்முகம் கழுவி வந்தான்.

கிளியே, குயிலே வேணியுடன் பேச வருவீரெனல்



"மணிப்புற வே!மாங் கொம்பில் மகிழ்ந்திருந் தினிது தென்னக்
கணிப்பறாக் கனிகூர்ந் துண்ணும் கவின்மிகு கிளியே! காதில்
தணிப்பறாப் பண்கள் பாடும் தனிக்கவிக் குயிலே! என்றன்
பிணிப்புறாப் பெண்மா னோடும் பேசவா ரீரோ?" வென்றான்.

நம்பியின் முகத்தில் தன்கண் நளினத்தில் புகும்வண் டாக்கிக்
கொம்பென அசைந்து, கோலக் கொடியெனக் குனிந்து வைத்தே,
அம்பென விரைந்து சென்றங் கருங்கத லிக்கு ருத்தும்
செம்பினில் நீருங் கொண்டு சீக்கிரம் திரும்பி வந்தாள்.

குருத்தான இலையைக் குந்திக் கோமள நிழலில் கூட்டி
விரித்தான வுடன்நீர் வீழ்த்தி, விருப்பமாய்ச் சுவைத்துண் ணற்கு
முரித்தான கறிகாய், நெய்,கூட் டூறுகாய், அப்ப ளம்,மோர்
பிரித்தான பின்,முன் சோறு பிசைந்திடக் குழம்பும் வார்த்தாள்.