உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

"என்கர மிணய வுன்றன்‌ இனியசெங்‌ காந்தள்‌ போன்ற
மென்கரம்‌ மேவ வைத்து, மேன்மாடி முற்றம்‌ மேவிப்‌
பொன்கரம்‌ பொலியப்‌ பூத்த புகழ்மதி நிலவு காலத்‌
தன்கரம்‌ தடவித்‌ தென்றல்‌ தவழ்கின்ற பொழுதா?" என்றான்‌.

"பேச்சுக்குப்‌ பேச்சு பேசிப்‌ பெருக்கிக்கொண் டிவ்வா றாய்நீர்‌
மூச்சுக்கு மூன்று கேள்வி முடுக்காதீர்‌! மொழிந்தேன்‌ தேரம்‌
ஆச்சென! அதிக மாயின்‌, அக்காளே வெறுப்பா ளஞ்ச;
ஏச்சுக்குள்‌ ளாக்கா தீரின்‌ றென்னை" யென்‌ றெழுந்து சென்றாள்‌.

மாலையில்‌ மனைபுகல்‌



ஞாயிற்றுப்‌ புத்தே ளந்த நாள்முற்றுப்‌ பெறவே விட்டுப்‌
போயிற்று; புவனம்‌ பூரா புல்லிருள்‌ போர்க்கா முன்னோ,
'காயுற்றுக்‌ கனியு முற்றுக்‌ களிப்புற்றே' மெனக்கா கங்கள
வாயுற்று வாழ்த்திற்‌ 'றின்று வாழ்ந்தனம்‌ பசியற்‌' றென்றே.

காலைதா னாகச்‌ சென்றான்‌; கண்ணொடு கருத்தாய்ச்‌ செய்யு
வேலைதா னாகி நின்றான்‌; வெளிச்சமுங்‌ குறைத்து வேளை
மாலைதா னாகக்‌ கண்டான்‌; மகிழ்ச்சிகூர்ந்‌ தாட்க ளோடும்‌
சாலைதா னாகி வந்தான்‌, சலிப்பாற நடந்த வாறே.

வழிநடை வார்த்தை



"நஞ்சையன்‌ குடித்த னத்தில்‌ நட்டமே நட்டம்: நல்ல
புஞ்செயில்‌ பயிர்நே ராமல்‌ போயிற்றா" மென்றான்‌, பொன்னன்‌.
"பஞ்சாங்கம்‌ பார்த்தான்‌ வாய்த்த பருவத்தைப்‌ பாரா னாகி
வஞ்சித்தாள்‌ வைய கத்தாய்‌ வருந்திட" என்றான்‌ நித்யன்‌.

"மாடொன்று கன்றை யீன்று மாசது மண்ணில்‌ வீழ்ந்தால்‌,
மூடொன்றப்‌ பையில்‌ போட்டு முகம்‌ கோணா தெடுத்துச்‌ சென்று,
கேடொன்று வாரா தாலங்‌ கிளையினில்‌ கட்டி விட்டால்‌,
பாடின்‌றி மிகும்பா லென்றும்‌ பகர்கிறா" னென்றான்‌, சின்னான்‌.