40
"பச்சைப்புல் பருத்திக் கொட்டை பணச்செல வனைத்தும் பையில்
மிச்சம்தான்! இந்தத் தோது மேல்நாட்டா ரறியார்! மேலும்,
இச்சித்த விதம்பால் மாடும் இருமடங் கீயு மாயின்,
மெச்சத்தான் வேண்டும் நாடிம் மேதையை!" யென்றான், நித்யன்.
தேடிய பொருளை யெல்லாம் தினமுஞ்சூ தாடித் தோற்றுக்
கூடிய மனைவி மக்கள் கூழின்றிக் காயக் கும்பி,
'நாடிய பொருள்கை கூடும்; ஞானமும் நல்கு' மென்று
பாடிய பக்த னென்றே 'பக்'கெனச் சிரித்தான் பொன்னன்.
நித்தியன் உலக இயல்புரைத்தல்
<poem>வருந்திடு வதற்குத் தன்னை வாடிக்கை யாக்கிக் கொண்டோன்,
"மருந்தடித் துயிரை மாய்த்தல் மாபாவ' மெனப்பூச் சிக்கே
விருந்திடச் செய்தான் நன்கு விளைகின்ற சோளக் காட்டைப்
புரிந்திடப் புகலா ரானார் புலவரும் முயன்று பொன்னா!
'பாவிரி தமிழைப் பார்மேல் பயிராக்கற் ககத்தி யன்தான்,
காவிரி கதிக்காம் நீரைக் கமண்டலந் தனில்கொண் டேகத்
தேவரி லொருவன் காக்கைத் தேகங்கொண் டதைக்க விழ்க்கப்
பூவிரி புனலாய்ப் பொங்கிப் போயிற்று புவிமீ' தென்றே,
'நெய்புக நேர்ந்து, நாவின் நீர்புகு முணவாய் நீடும்
செய்புகு பன்றி, சேற்றில் சிதறிய செந்நெல்' லென்ன
மெய்புகு சங்கம் மேவி மிளிர்ந்த நூல் மிதிபட் டந்தோ!—
பொய்புகு புராணம் புக்குப் புலன்பாழாய்ப் போயிற் றன்றே!
தாழ்பவர் தம்மைத் தாங்கித் தடுத்திடார்; இருட்டில் தட்டி
வீழ்பவர் கண்முன் வெற்று விளக்கையும் காட்டார்; நீரில்
ஆழ்பவர் கையில் யாரும் அளித்திடார் மிதவை! யந்தோ!
வாழ்பவர் தமக்கு வாழா வழிகாட்டி வருத்து வார்கள்!