பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

நிலமுள்ள மாந்தர்‌; நேய நெறிமுறை நியதி நீங்கா
தலமுள்ள மாந்தர்‌; நாடி நயம்பட நவிலும்‌ நல்ல
குலமுள்ள மாந்தர்க்‌ குள்ளே குவலயந்‌ தனிலே குன்றாப்‌
பலமுள்ள மாந்த ரென்போர்‌ பணமுள்ள மாந்த ரன்றோ?

ஆறெலாம்‌ உடலைத்‌ தேடி யடையுமா றகிலத்‌ தில்நற்‌
பேறெலாம்‌ தேடிச்‌ செல்லும்‌ பெருஞ்செல்வ ரானோர்‌ தம்மை!
வீறெலா மவர்க்கே! வெற்றி விருதெலா மவர்க்கே! வீட்டில்‌
சோறிலார்க்‌ கந்தோ! சொல்லச்‌ சொந்தமென்‌ றொன்‌றிங்‌ குண்டோ?

காசினை யீச னாகக்‌ கருதுவார்‌ பூசு ரர்கள்‌!
காசினை யாசா னாகக்‌ கருதுவார்‌ காவ லர்கள்‌!
காசினை நேச னாகக்‌ கருதுவார்‌ வணிகர்‌! கையில்‌
காசினைத்‌ தாச னாகக்‌ கருதுவார்‌ கடைய ரானார்‌!

'அருளுள்ள முள்ளோர்க்‌ கென்றும்‌ அகமகிழ்‌ வமைவ தில்லை;
இருளுள்ள முள்ளோர்க்‌ கென்றும்‌ இன்பமே யிருப்ப தில்லை;
மருளுள்ள முள்ளோர்க்‌ கென்றும்‌ மதிப்பில்லை; மண்பெண்‌ பொன்னாம்‌
பொருளுள்ள முள்ளோர்க்‌ கெல்லாம்‌ பூமியிற்‌ பொருந்திற்‌' றென்பர்‌

கஞ்சனோ, கயவ னோயோ,- கனவானென்‌ றிருக்கக்‌ கண்டா
லஞ்சிநா யெனவே வாலை யாட்டுவா ராயி ரம்பேர்‌!
'விஞ்சினா யண்ணல்‌! எல்லா விதத்திலு' மெனவி ளம்பிக்‌
கெஞ்சிநே சித்துன்‌ வாய்ச்சொல்‌ கேட்டுப்பின்‌ பற்றும்‌ ஞாலம்‌!

நித்தியன்‌ குறுக்கிடல்‌ஆகவே..", "போதும்‌ மாமா! அறிவமைந்‌ தாரா யாமல்‌
நோகவே வைப்பீர்‌, நீதி நூல்முறை நோலீ ராய்நீர்‌!
சாகவே நேர்ந்த போதும்‌ சரி;கன வான்‌மட்‌ டும்நா
னாகவே மாட்டே" னென்றே அங்கிருந்‌ தெழுதந்தான்‌ நித்யன்‌.