பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

அறுப்புடன்‌ தொடங்குங்‌ கள்‌;பின்‌ னனைத்தையும்‌ சுமந்து சென்று,
பொறுப்புடன்‌ களத்தில்‌ கொண்டு போடுங்கள்‌! பொறுமை யின்றி
வெறுப்புடன்‌ பேசிக்‌ கொண்டு வேலையைக்‌ கெடுக்கா தீர்கள்‌!
சிறப்புடன்‌ முடித்தால்‌ வேலை, சிரித்திடத்‌ தருவேன்‌ கூலி!

வருத்தாதீ ருடலை; வாய்ச்சொல்‌ வளர்த்தாதீர்‌; வைத்த கண்ணும்‌
கருத்தாகக்‌ கொய்து மெத்தக்‌ கணக்காக வுழைப்பீ ராயின்‌,
உருத்தாது வெயிலும்‌; கையும்‌ ஓயாது; தொடங்கு வீர்கள்‌;
விரித்தேதும்‌ விரும்ப வில்லை விளம்புதற்‌" கென்றான்‌ நித்யன்‌.

மாமாவின்‌ விடாப்பிடி


"சீமான்தா,' னெனவே தன்னைச்‌ சேர்ந்தவர்‌ சிறப்பிக்‌ கின்ற
மாமாவின்‌ மனம்நம்‌ பிக்கை மறையாம லிருந்த தால்தான்‌,
'நாமாகச்‌ சொல்லிப்‌ பார்ப்போம்‌ நயமாக' வெனவே நாடித்‌
தாமாகக்‌ குளத்துக்‌ காட்டுத்‌ தடங்கண்டு நடந்தார்‌ மாமா!

உளமொட்டி யொழுகா தானுக்‌ குணர்த்தவு மூரே போற்றும்‌
களமிட்ட கம்பைக்‌ எண்டு களிக்கவும்‌, கவின்மி குந்த
இளமொட்டா யிருந்து நேற்றின்‌ றின்மணம்‌ கமழப்‌ பூத்த
குளமொட்டிக்‌ கூச்சத்‌ தோடும்‌ குறுநடை யிட்டா ரன்றே.

இரவின்‌ றிப்‌பகலு மின்‌றி, ஏற்போருக்‌ கிரங்கி யீந்து,
கரவின்‌றி வாழ்ந்த வள்ளல்‌ காசின்‌றி யிருந்த தொப்ப,
வரவின்‌றிச்‌ செலவு மின்றி வற்றிய குளத்தைப்‌ பார்த்துப்‌
பரிவின்றி வைதார்‌: "ஏரி பாழாகி விட்ட" தென்றே.

சூடேறி வியர்த்த மேனி சுறுக்கேறத்‌ துடைத்த வாறே,
மேடேறி நின்றார்‌; மீண்டும்‌, மெதுவாகக்‌ கூர்ந்து கண்ணைக்‌
காடேறி விளைந்த கம்பங்‌ கதிர்களில்‌ பதித்தார்‌; 'கட்டில்‌
பாடேறி விட்டால்‌, வீட்டில்‌ பணமேறத்‌ தடையே' தென்றார்‌.