பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

வெறுப்புடன்‌ மாமா தன்னை விட்டுவிட்‌ டகன்‌ற தன்‌பின்‌,
அறுப்புடன்‌ பெண்க ளொன்றி யயர்வுறா துழைப்ப தாய்த்து
பொறுப்புடன்‌ பார்த்து வந்து பொலிவுடன்‌ நின்றான்‌; போனான்‌
குறிப்புடன்‌ களத்தில்‌ வேலை குறைவற முடிக்கு மாறே.

தொந்தர வாய்ப்பன்‌ மாடு தொடுத்துத்தாம்‌ பியக்க வில்லை;
சுந்தரக்‌ கவை,சீ மாரு, சொடுக்கிடும்‌ சாட்டை யில்லை;
மந்திர மறைக ளோதா மானிடன்‌ மகிழச்‌ செய்த
எந்திரம்‌ கதிரில்‌ கம்பை எளிதாகப்‌ பிரித்த தங்கே!

உண்பது கம்பஞ்‌ சோறே உழைப்பவர்‌; உடையோர்‌ விற்ற
தெண்பது ரூபா யென்றே இருநூறு மூட்டை; நாட்டில்‌
பண்பற விலைக ளேறப்‌ பதினாறா யிரமும்‌ பாங்கா
யொண்பதி வணிக னீய வுளம்நொந்து பெற்றான்‌ நித்யன்‌.

பிணிகளின்‌ மூலம்‌, பேராப்‌ பேய்ப்பசி மூலம்‌, பேணும்‌
நுணுகிய கல்வி கேள்வி தோன்மையைத்‌ துறந்திங்‌ காளும்‌
பயணிகைய ரால்கால்‌ பங்கும்‌, பகவான்க ளால்கால்‌ பங்கும்‌,
வணிகர்பங்‌ கரையாய்‌ வைத்தே வளர்த்துவர்‌ வைய கத்தே.

மேல்வைத்த வெய்யோன்‌ கன்மேல்‌ மேனியை வைத்த பின்‌,தன்‌
பால்வைத்த பணத்தை நித்யன்‌ பதனமாய்ப்‌ பையில்‌ வைத்து,
வேல்வைத்த விழியாள்‌ காதல்‌ வேணியை நினைவில்‌ வைத்துக்‌
கால்வைத்தான்‌ மனையில்‌, மாமா கறுவுதல்‌ கணக்கில்‌ வைத்தே!

சகிக்காத சச்சரவு


மணமெண்ணிக்‌ கொண்ட மானாய்‌ மதர்விழி வேணி காக்கக்‌
கணமெண்ணிக்‌ கொண்டு மாமா கடுஞ்சினக்‌ கனலைக்‌ காக்கக்‌
குணமெண்ணிக்‌ கொண்டு வந்த குடிமகன்‌, அண்ணன்‌ கையில்‌
பணமெண்ணிக்‌ கொடுத்தா னண்ணி பரிந்துபா ராட்டு மாறே.