பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

எதிர்பார்த்ததும்‌ ஏற்பட்டதும்‌

அடிபட்ட புலியா 'யா'வென்‌ றாவேச மடைவா னன்றேல்‌,
இடிபட்ட மரமாய்‌ வீழ்வா னெனஎதிர்‌ பார்த்த மாமா,
பிடிபட்ட தலைவனென்னப்‌ பேச்சறப்‌ பேணி னோர்தாம்‌
'குடிபட்ட பெருமைக்‌ கில்லை குறை'யெனக்‌ குளிர்ந்தா ருள்ளம்‌,

இங்கேயே கொல்லுங்க ளெனல்‌

"எதற்காகச்‌ சென்னை வேண்டு மென்கின்‌றீ ரிப்போ தேநா
னதற்காக அமையக்‌ கூராய்‌ அரிவாளைத்‌ தருவேன்‌ நீட்டி!
இதற்காக வருந்த வில்லை எவருமிங்‌ கெனவே, வுங்கள்‌
முதற்கேதும்‌ மோச மில்லை; முடிக்கலா மிங்கே யேநீர்‌!

நல்லது மம்டும்‌ இல்லாதிருக்கிறீர்‌ எனல்‌

கனங்கொள்ளக்‌ கருது கின்‌றீர்‌ கருணைதான்‌ கருத்தி லின்‌றி;
இனங்கொள்ள இயம்பு கின்றீர் ஈகைதா னிதயத்‌ தின்றி;
சினங்கொள்ளச்‌ செயல்செய்‌ கின்றீர்‌ சிறுபிள்ளைத்‌ தனமாய்ச்‌ சேர்த்து
மனங்கொள்ள நல்ல தொன்றிம்‌ மண்ணின்‌மே லிலையா மாமா?

இணைந்த இல்லத்தியல்பிஃதெனல்‌

திரியிவ ரெண்ணெய்‌ வேணி; திருவிளக்‌ கண்ணி; நான்‌தீ!
அரியவிவ்‌ வமைப்பி லொன்றை யகற்றிடி னனைத்தும்‌ பாழாம்‌;
உரியதோ ருண்மை யோரா 'தோடிப்போ' வெனவே, உற்ற
பெரியவ ரெனவி ருந்தும்‌ பிதற்றினீர்‌ பித்த னாய்நீர்‌!

'கருத்தொரு மித்த தாகும்‌ காதலும்‌ மணமு' மென்பர்‌;
பொருத்தமே யில்லா- அந்தப்‌ பொல்லாத பொருளுக்‌ கொப்பி
ஒருத்தர்பின்‌ னொருத்த ராகி யொவ்வொரு நாளு மோயா
வருத்தமே வருவிக்‌ கின்றீர்‌, வருமின்ன லறியா தீராய்‌!