பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

கன்னியின் கடைசிக் கணை

"அண்ணனும் தம்பி யென்ப தனைவரு மறிவா ரேனும் ,
'பண்ணுடன் பாட' லென்றே பழகினோர் பகர்வர்; 'பார்க்கும்
கண்ணுடன் மணியு' மென்றே கருதுகின் றேன்நா னப்பா!
எண்ணியும் பாரா தேநீர் இவர்களைப் பிரிக்கப் பார்த்தீர்!
 
சாற்றுக்குள் உப்பைப் போட்டுச் சரிசெய்யத் தெரியா தப்பா;
சோற்றுக்குள் கஞ்சி சுண்டிச் சுவைபடும் பதங்கண் டோரேன்;
சேற்றுக்குள் நின்று நாற்றைச் சீராக நடுதல் செய்யேன்;
பேற்றுக்குள் மட்டும் சாலப் பெற்றுள்ளேன் பிறர்கண் முன்னே!

சிற்பத்தில் என்னைச் சேர்த்துச் செயலின்றி வளர்த்தீர்! வாழக்
கற்பித்த தில்லை கேட்டுக் கல்வியைத் தவிர்த்து நீங்கள்!
'இற்பித்தி' யெனஇன் றிங்கே இருப்பவ ரிரங்கிக் கூறும்
சொற்புத்தி யால்தான் கொஞ்சம் சுகங்கண்டு வாழ்கின் றேன்நான்.

கலையிது! காட்சி யீது! கண்கொண்டு காணீராகி,
நிலையிது; நெறியெ தென்னும் நினைவையும் நீத்து விட்டுத்
தலையெது? வாலெ தென்ற தரமறி யாது 'தள்ளா
மலையிது, வென்றோ ராது மண்வெட்டி யேந்தா நிற்பீர்!

குற்றத்தைச் சகியா தேநீர் குடும்பத்தைக் குலைப்பீ ராயின்,
செற்றத்தைத் தீர்த்துக் கொள்ளச் சீரிய வழிவே றுண்டு;
சுற்றத்தை மறந்து, கொஞ்சம் சுருக்காகக் கலந்து நஞ்சை
யுற்றொத்துப் பருகத் தந்தா லுதவினோ ராவீ" ரென்றாள்.

தந்தை தளர்வுறல்

நல்லாளின் நடப்பு ஞானம் நாராசம், நாண்வில் நாவாய்ச்
சொல்லாகிச் சொரியக் காதில் சுரீரெனப் புகவே தந்தை
கல்லாகி யிருந்த நெஞ்சும் கனலுற்ற மெழுகே யாகி,
"எல்லாமும் வல்ல ஈசா! என்செவி தூர்க!" வென்றார்.