பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

குயிற்குரல்‌, தென்றல்‌, கோலக்‌ கொடிமுல்லை மணமும்‌ நெஞ்ச
வயற்குரம்‌ பருவம்‌ நீராய்‌, வளர்பிறை ஏராய்‌, வாழ்வில்‌
செயற்கரும்‌ பயிரா யின்பம்‌ சிறுமக்கள்‌ விளைவு காணும்‌
இயற்கையின்‌ நியதி வெல்ல இயல்வதோ இளைஞர்க்‌ கம்மா!

வேணியின்‌ பணி

தாய்தந்தை தவறி, ஊரில்‌ தமியளாய்த்‌ தவித்தா ளைத்தாம்‌
போய்‌ 'தந்தை தாயாய்ப்‌ போற்றிப்‌ பொன்போன்று காப்பே' மென்று
வாய்தந்து வரவ ழைத்து, வயணமாய்‌ வளர்க்க இன்று
காய்தந்து கனிந்த தென்னக்‌ கவின்பெற லானாள்‌ கன்னி!

'பெரும்புயல்‌ திசையை மாற்றிப்‌ பெயர்ந்தது பெரிது' மென்ன,
அரும்பிய அகத்தின்‌ நோயும்‌ ஆகுமா றணுகி யன்பாய்‌,
நிரம்பிய நெஞ்சி னோடும்‌ நித்தியன்‌ நிலைய றிந்து
விரும்பிய விதமாய்‌, வேணி வினையோர்ந்து புரிந்தாள்‌ வீட்டில்‌.

'அருந்திடத்‌ தண்ணீ' ரென்றால்‌ அணங்கின்கை உடனே நீட்டும்‌
'கரிந்திடு முடல்தா” னென்றால்‌, காற்றங்கு நிலவும்‌! போர்வை
சரித்திடக்‌ குளிருதென்றால்‌, சரிசெய்து விடுவாள்‌! 'சீவன்‌
பிரிந்திடு' மென்றால்‌, 'ஓடிப்‌ பிடிதீதுநான்‌ பிணிப்பே' னென்‌பாள்‌.

ஏழுநா ளிதய மொப்பி இமைகண்ணைக்‌ காத்த தென்னத்‌
தாழநோய்‌ தடுத்துக்‌ காத்த தகைமையோ? தயையே தானோ'
ஊழினா லமைத்துக்‌ கூறும்‌ உரிமையோ? உணரேம்‌; 'வேணி!
ஏழைநீ யன்று: பெண்மைக்‌ கிலக்கணம்‌ நீதான்‌,' என்பான்‌

.


காலமோர்ந்து காத்திருத்தல்‌

வானிலும்‌ பகையை வென்று வளர்பிறை யாட்சி கோலக்‌
கானிலும்‌ பழுப்பை நீத்துக்‌ கவின்‌ மரம்‌ தளிர்கள்‌ கோலத்‌
தேனிலும்‌ இனிமை தேர்ந்து தீங்குயில்‌ இசையைக்‌ கோல
வேனிலும்‌ தென்றல்‌ தேரில்‌ விருப்பமா யுலவல்‌ கோலும்‌!