பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

99


அந்தம் உண்டா? என்று உள்ளார்ந்த தியாக உணர்ச்சியோடு எண்ணியதால் - இடை இடையே களைத்து - இடையிடையே நெப்போலியனைப் போல நொடித் துக்கம் தூங்கி, இரவு நேரத்தில் இரைக்காக அலையும் காட்டு மிருகங்களைப் போலத் - தத்துவங்களுக்காக அலைந்து கொண்டிருப்பவன்!

அந்த கிராம மக்கள் கிடைத்ததை வைத்து வாழ நினைப்பவர்கள்!

நான், கிடைக்க வேண்டியது ஏன் கிடைக்கவில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவன்.

அவர்கள் வருத்தம் வருகிற நேரத்தில், முகத்திலடித்துக் கொண்டு கோயில் முன்பு அழுவார்கள்.

வருத்தம் வருகின்ற வழியை அடைத்துவிடத் துடித்துக் கொண்டிருப்பவன் நான்!

துன்பம் வரும்போது அவர்கள் அழுவார்கள் - இன்பம் சிரிக்கும் போது சிரிப்பார்கள்!

துன்பம் துளிர்க்கும் இடத்தையும், இன்பம் அரும்பும் இடத்தையும் - மனிதனுக்கென்றே படைத்தவர்கள் யார்? என்று, நான் கேட்டுக்கொண்டிருப்பவன்!

இந்தச் சமுதாயம், அந்த மக்களைப்போல் கபடு சூது அற்ற நிலையில் இருக்கிறது.

ஆத்மா, என்னைப்போல ஒர் உண்மைப்பொருளைத் தேடிக் கொண்டிருக்கிறது.

அவர்கள், ஐம்புலனுக்கும் ஆறறிவுக்கும் நடுவில் இருக்கின்ற உயிரைப்போல் - உற்றார் உறவினர்கட்கு மத்தியில் இருக்கிறார்கள்!

உடற்கூட்டைவிட்டு வெளியே வந்த உயிர், தங்க இடமி ல்லாமல் தவிப்பதுபோல் - நான் மலைகளுக்கு இடையில் ஆதரவற்றிருக்கிறேன்.

எனது சிந்தனையே! நீ எங்கு சென்றாலும் சரி, திரும்பி வருகிற நேரத்தில், கடைக்குச் சென்ற தாய், குழந்தைகட்குத்