பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி #03

'உண்மையை நீ உரைக்கமாட்டாய். ஒரு கிச்சிலிப் பழத் தோலை நசுக்கினாலும் கண் எரியக்கூடிய ரசமாவது கிடைக்கும்!

'உன்னைக் கசக்கிப் பிழிந்தாலும், நீ பொய்யைத் தவிர, உண்மையைப் பேசமாட்டாய்' என்று உதாசினம் ஆடினர்:

என்னுடைய வார்த்தைகள்; உங்கள் தலைகட்கு மேலே ஒளிர்ந்து கொண்டிருக்கும் விண்மீனைப்போல் - இல்லை யென்றால், உங்களுடைய உடம்பில் ஒடிக்கொண்டிருக்கும் உயிரைப் போல உண்மையானது தான்.

உங்களுடைய கிராமத்திலிருக்கின்ற ஒரு கலைஞன், யாழை மீட்டுகின்றபோது வரும் உண்மையான சுவர ஜாலங்களைப் போல; அப்பழுக்கற்றவை.

கட்டாந்தரையைக் கழனியாக்க, நிலத்திலே தோய்ந்து பளபளக்கும் கார் முனையைப்போல - என்னுடைய உண்மைகள் ஒளிர்கின்றன என்று கூறுகிறேன்.

அந்தப் பறவை, அப்போது தன்னுடைய கம்பீரமானத் தோற்றத்தால் , கிராம மக்களைத் திரும்பிப் பார்த்தது! ஒரு குரல் எழுப்பியது! ஒரே ஒரு வினாடிதான்!

மனிதன் இறப்பை வென்றுவிட்டான்! அவனுடைய உடலிலிருக்கும் உயிரணுக்கள், இனி மரணத்திற்கு அஞ்சவேண்டியதில்லை!

இந்த உலகம்; என்று மனிதனுக்குப் பிறப்பைக் கொடுத்ததோ - அன்றே, இறப்பையும் கொடுத்தது!

ஆனால், அந்தப் பறவை, சாகா வரத்தைத் தந்துவிட்டு - விடிவதற்கு முன், சென்றுவிட்டது:

அறிஞர் அண்ணா அவர்கள், அந்த வான் பறவையைப் போல் உலகுக்கு வந்தவர்.

நாட்கள் தோறும் செத்துக் கொண்டிருக்கின்ற ஜனநாயகம், அறிஞர் அண்ணாவால் சாகாவரம் பெற்றது.